பொதுப்பிரிவினருக்கான மருத்துவ கலந்தாய்வு இன்றுடன் நிறைவு!

 

பொதுப்பிரிவினருக்கான  மருத்துவ கலந்தாய்வு இன்றுடன் நிறைவு!

பொதுப்பிரிவினருக்கான மருத்துவ கலந்தாய்வு இன்றுடன் நிறைவடையவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கான கலந்தாய்வு கடந்த மாதம் 18 ஆம் தேதி முதல் தொடங்கியது. சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்று வரும் இந்த கலந்தாய்வில் முதல் மூன்று நாட்கள் அரசு பள்ளி மாணவர்களுக்கான 7.5% இடஒதுக்கீடு அடிப்படையில் கலந்தாய்வு நடந்தது. அதன்பின் கடந்த மாதம் 21 ஆம் தேதி முதல் சிறப்பு பிரிவினருக்கான மருத்துவ கலந்தாய்வில் மாற்றுத் திறனாளிகள், முன்னாள் ராணுவ வீரர்களின் வாரிசுகள் என கலந்து கொண்டனர்.

பொதுப்பிரிவினருக்கான  மருத்துவ கலந்தாய்வு இன்றுடன் நிறைவு!

இதையடுத்து நிவர் புயல் காரணமாக கடந்த 24 ஆம் தேதி நடைபெற இருந்த கலந்தாய்வு கடந்த மாதம் 30 ஆம் தேதி ஒத்திவைக்கப்பட்டது. அந்த வகையில் கடந்த 30 ஆம் தேதி பொது பிரிவினருக்கான கலந்தாய்வு தொடங்கியது.

பொதுப்பிரிவினருக்கான  மருத்துவ கலந்தாய்வு இன்றுடன் நிறைவு!

இந்நிலையில் பொதுப்பிரிவினருக்கான எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ்., படிப்பிற்கான மருத்துவ கலந்தாய்வு இன்றுடன் நிறைவடைகிறது. அரசு, தனியார் கல்லூரிகளில் மீதமுள்ள 1,517 இடங்களுக்கு இன்று 550 மாணவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.