இட ஒதுக்கீடு வழங்க, ரத்து செய்ய இந்திய மருத்துவ கவுன்சிலுக்கு அதிகாரம் இல்லை! – உச்ச நீதிமன்றம் அதிரடி

இட ஒதுக்கீடு வழங்க, ரத்து செய்ய இந்திய மருத்துவ கவுன்சிலுக்கு அதிகாரம் இல்லை! – உச்ச நீதிமன்றம் அதிரடி

மருத்துவ முதுநிலைப் படிப்பில் அரசு பணியில் உள்ள மருத்துவர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்குவதை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட வழக்கில், இட ஒதுக்கீடு வழங்க, தடுக்க இந்திய மருத்துவ கவுன்சிலுக்கு அதிகாரம் இல்லை என்று உச்ச நீதிமன்றம் கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இட ஒதுக்கீடு வழங்க, ரத்து செய்ய இந்திய மருத்துவ கவுன்சிலுக்கு அதிகாரம் இல்லை! – உச்ச நீதிமன்றம் அதிரடி

தமிழகத்தில் எம்.பி.பி.எஸ் முடித்த மாணவர்கள் கிராமங்கள், மலைப் பிரதேசங்கள் என அரசின் ஆரம்ப சுகாதார நிலையங்களில் பணியாற்றி வருகின்றனர். அப்படி பணியாற்றுபவர்களுக்கு முதுநிலை படிப்பில் சேரும் வாய்ப்பு வழங்கப்படுகிறது. நீட் நுழைவுத் தேர்வு வந்த பிறகு இந்த மாணவர்களுக்கான வாய்ப்பு பறிபோகிறது. இதை சமாளிக்க இட ஒதுக்கிடு

இட ஒதுக்கீடு வழங்க, ரத்து செய்ய இந்திய மருத்துவ கவுன்சிலுக்கு அதிகாரம் இல்லை! – உச்ச நீதிமன்றம் அதிரடி

உள்ளிட்ட சிறப்புச் சலுகைகள் வழங்கப்பட்டுள்ளன. அப்படி வழங்கவில்லை என்றால் கிராமப்புறங்களில் சேவை செய்ய மருத்துவர்கள் வருவது குறைந்துவிடும். எல்லோரும் நீட் தேர்வுக்கு தயாராக சென்றுவிட்டால் கிராமப்புற மக்களுக்கு சேவை வழங்க மருத்துவர் இல்லாத நிலை வந்துவிடும்.

இட ஒதுக்கீடு வழங்க, ரத்து செய்ய இந்திய மருத்துவ கவுன்சிலுக்கு அதிகாரம் இல்லை! – உச்ச நீதிமன்றம் அதிரடி

இந்த நிலையில், இட ஒதுக்கீடு வழங்கப்பட்டதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் இன்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது. அதில், மருத்துவ உயர் படிப்பில் அரசு மருத்துவ மாணவர்களுக்கு மாநில அரசுகள் இட ஒதுக்கீடு வழங்கலாம். இட ஒதுக்கீடு வழங்குவதற்கோ, ரத்து செய்வதற்கோ இந்திய மருத்துவ கவுன்சிலுக்கு அதிகாரம் இல்லை. அது தொடர்பாக மாநில அரசுகளே சட்டம் இயற்ற முடியும்” என்று கூறியுள்ளனர்.