“தமிழகத்தில் குற்றங்கள் நடக்காமல் தடுக்க நடவடிக்கை” டிஜிபி சைலேந்திரபாபு

 

“தமிழகத்தில் குற்றங்கள் நடக்காமல் தடுக்க நடவடிக்கை” டிஜிபி சைலேந்திரபாபு

தமிழக காவல்துறையின் 30வது சட்டம் – ஒழுங்கு டிஜிபியாக பதவி ஏற்றார் சைலேந்திர பாபு.சென்னை மெரினாவில் உள்ள டிஜிபி அலுவலகத்தில் புதிய டிஜிபி சைலேந்திரபாபு பதவியேற்றுக்கொண்டார். புதிய டிஜிபி சைலேந்திரபாபுவிடம் பொறுப்புகளை ஒப்படைத்து வாழ்த்துக்களை தெரிவித்தார் திரிபாதி.திரிபாதியின் பதவிக்காலம் முடிவடைந்ததைத் தொடர்ந்து புதிய டிஜிபியாக பதவி ஏற்றுக்கொண்டார் சைலேந்திர பாபு.

“தமிழகத்தில் குற்றங்கள் நடக்காமல் தடுக்க நடவடிக்கை” டிஜிபி சைலேந்திரபாபு

இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்த தமிழக சட்டம் – ஒழுங்கு டிஜிபி சைலேந்திரபாபு, தமிழகத்தில் குற்றங்கள் நடக்காமல் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறினார். தொடர்ந்து பேசிய அவர், அரிய வாய்ப்பை தந்த முதல்வருக்கு நன்றி. சட்டம் ஒழுங்கிற்கு முக்கியத்துவம் தரப்படும். முதல்வரிடம் பொதுமக்கள் அளித்த மனுக்கள் மீது 30 நாட்களுக்குள் நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தார். அதேபோல் மக்களிடம் போலீசார் மனிதாபிமானத்துடன் நடந்து கொள்ள வேண்டும் என்றும் தெரிவித்தார்.

“தமிழகத்தில் குற்றங்கள் நடக்காமல் தடுக்க நடவடிக்கை” டிஜிபி சைலேந்திரபாபு

தமிழகத்தின் 30ஆவது டிஜிபியாக பதிவியேற்றுள்ள சைலேந்திரபாபு கன்னியாகுமரி குழித்துறையை சேர்ந்தவர். 1987 ஆம் ஆண்டு ஐபிஎஸ் அதிகாரியான இவர் எம்எஸ்சி வேளாண்மை., எம்பிஏ., பிஎச்டி பட்டப்படிப்புகளை படித்துள்ளார். கடலூர் திண்டுக்கல், சிவகங்கை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு கிழக்கு மாவட்ட எஸ்பி ஆகவும், அடையாறு துணை ஆணையராகவும் பணியாற்றி உள்ள இவர் சந்தன கடத்தல் வீரப்பனை பிடிப்பதற்காக அமைக்கப்பட்ட சிறப்பு அதிரடிப் படையில் ஐஜியாக முத்திரை பதித்தவர். அத்துடன் ‘நீங்களும் ஐபிஎஸ் அதிகாரி ஆகலாம்’ ,’சாதிக்க ஆசைப்படு’, ‘உடலினை உறுதிசெய்ய’ உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட புத்தகங்களை எழுதியுள்ளார்.