பேச்சுவார்த்தைக்கு இந்தியா விருப்பம் தெரிவித்தது என கப்சா விட்ட பாகிஸ்தான் அதிகாரி.. பதிலடி கொடுத்த மத்திய அரசு

பேச்சுவார்த்தைக்கு இந்தியா விருப்பம் தெரிவித்தது என கப்சா விட்ட பாகிஸ்தான் அதிகாரி.. பதிலடி கொடுத்த மத்திய அரசு

இந்தியா பேச்சுவார்த்தைக்கு விருப்பம் தெரிவித்து செய்தி அனுப்பியதாக பாகிஸ்தானின் மூத்த அதிகாரி பொய்யான தகவலை தெரிவித்தற்கு, அப்படி ஒரு செய்தியை அனுப்பவே இல்லை என்று மத்திய அரசு பதிலடி கொடுத்துள்ளது.

பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானின் தேசிய பாதுகாப்பு மற்றும் மூலோபாய கொள்கை திட்டமிடல் அதிகாரி மொயீத் டபிள்யூ. யூசுப் ஊடகம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில், பேச்சுவார்த்தைக்கு விருப்பம் தெரிவித்து இந்தியாவிடமிருந்து ஒரு செய்தி கிடைத்துள்ளது என தெரிவித்து இருந்தார். இது நம் நாட்டில் பெரும் சர்ச்சையை கிளப்பியது.

பேச்சுவார்த்தைக்கு இந்தியா விருப்பம் தெரிவித்தது என கப்சா விட்ட பாகிஸ்தான் அதிகாரி.. பதிலடி கொடுத்த மத்திய அரசு
அனுராக் ஸ்ரீவாஸ்தவா

இது தொடர்பாக வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் அனுராக் ஸ்ரீவாஸ்தவா கூறியதாவது: பாகிஸ்தானின் மூத்த அதிகாரி ஒருவர் இந்திய ஊடகத்துக்கு அளித்த பேட்டியில் கூறியதை கேட்டோம். இந்தியாவின் உள்விவகாரங்கள் குறித்து கருத்து தெரிவித்துள்ளார். இது, வழக்கம் போல் இந்தியாவை தினசரி தலைப்புசெய்திகளில் இழுத்து, தற்போதைய அரசாங்கத்தின் (இம்ரான் கான் அரசாங்கம்) உள்நாட்டு தோல்விகளிலிருந்து கவனத்தை திசை திருப்பவும், அதன் உள்நாட்டு அங்கத்தினர்களை தவறாக வழிநடத்துவதற்கான பாகிஸ்தானின் முயற்சியாகும்.

பேச்சுவார்த்தைக்கு இந்தியா விருப்பம் தெரிவித்தது என கப்சா விட்ட பாகிஸ்தான் அதிகாரி.. பதிலடி கொடுத்த மத்திய அரசு
மொயீத் டபிள்யூ. யூசுப்

அவர் அளித்த அறிக்கைகள் கள நிலவரத்துக்கு முற்றிலும் முரணானவை, தவறான மற்றும் கற்பனையானவை. அவர் கூறியது போன்று எந்தவொரு செய்தியும் எங்கள் தரப்பிலிருந்து அனுப்பப்படவில்லை என்பதை தெளிவுப்படுத்துகிறேன். இந்தியாவுக்கு எதிராக எல்லை தாண்டிய பயங்கரவாதத்தை பாகிஸ்தான் தொடர்ந்து ஆதரவளித்து வருகிறது. பாகிஸ்தான் தலைமை இந்தியாவுக்கு எதிராக பொருத்தமற்ற, ஆத்திரமூட்டும் மற்றும் வெறுக்கத்தக்க பேச்சுக்களை பேசுவதில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது. இந்தியாவுக்கு எதிரான பயங்கரவாதத்திற்கு இத்தகைய ஆதரவு மற்றும் கேவலமான மற்றும் தவறான மொழியை பயன்படுத்துவது பொதுவான அண்டை உறவுகளுக்கு உகந்ததல்ல. இவ்வாறு அவர் தெரிவித்தார்.