இதுக்கு இவ்ளோ பில்டப் ஆ…! வைகோவை கலாய்க்கும் நெட்டிசன்ஸ்!

இதுக்கு இவ்ளோ பில்டப் ஆ…! வைகோவை  கலாய்க்கும் நெட்டிசன்ஸ்!

சட்டப்பேரவை தேர்தலுக்கான மதிமுக தேர்தல் அறிக்கையை வைகோ வெளியிட்டார்.

இதுக்கு இவ்ளோ பில்டப் ஆ…! வைகோவை  கலாய்க்கும் நெட்டிசன்ஸ்!

சட்டமன்ற தேர்தல் வரும் ஏப்ரல் 6-ஆம் தேதி நடைபெற உள்ளது. தேர்தலுக்காக தமிழக அரசியல் கட்சிகள் தீவிரமாக இயங்கி வருகின்றன. திமுக கூட்டணியில் காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள் கட்சி, மதிமுக , கம்யூனிஸ்ட் கட்சிகள் உள்ளிட்ட பல கட்சிகள் இணைந்துள்ளன. அதிமுகவில் பாமக, பாஜக, தமிழ் மாநில காங்கிரஸ் ஆகிய கட்சிகள் இணைந்துள்ளன. கூட்டணி கட்சிகளுடன் தொகுதி பங்கீடு, வேட்பாளர் என அனைத்தும் அறிவிக்கப்பட்ட நிலையில் முதல்வர் வேட்பாளர்கள் அனைவரும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதுக்கு இவ்ளோ பில்டப் ஆ…! வைகோவை  கலாய்க்கும் நெட்டிசன்ஸ்!

இந்நிலையில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ இன்று தங்கள் கட்சிக்கான தேர்தல் அறிக்கையை வெளியிட்டார். அதில்தமிழகத்தில் இந்தி, சமஸ்கிருதம் திணிப்புக்கு எதிர்ப்பு,பூரண மதுவிலக்கு கோருவோம்,தமிழர்களுக்கே வேலைவாய்ப்பில் முன்னுரிமை,நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தல்,குடியுரிமை திருத்தச்சட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தல் உள்ளிட்டவை இடம்பெற்றுள்ளன.

இதுக்கு இவ்ளோ பில்டப் ஆ…! வைகோவை  கலாய்க்கும் நெட்டிசன்ஸ்!

இதை கண்ட சமூகவலைத்தள வாசிகள் சிலர் இதுக்கு எதுக்கு தேர்தல் அறிக்கை வெளியிட்டு டைம் வேஸ்ட் பண்ணுறீங்க, திமுக தேர்தல் அறிக்கையை வழிமொழிகிறோம் அப்படி சொல்லிட வேண்டியது தானே என்று கிண்டல் செய்து வருகின்றனர்.

இதுக்கு இவ்ளோ பில்டப் ஆ…! வைகோவை  கலாய்க்கும் நெட்டிசன்ஸ்!

திமுக கூட்டணியில் உள்ள மதிமுகவுக்கு 6 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. அதன்படி, மதுரை தெற்கு, வாசுதேவநல்லூர் (தனி), சாத்தூர், அரியலூர், பல்லடம், மதுராந்தகம் (தனி) ஆகிய 6 தொகுதிகளிலும் உதயசூரியன் சின்னத்தில் மதிமுக போட்டியிடுகிறது. இந்த 6 தொகுதிகளிலும், மதிமுக அதிமுகவுடன் நேரடியாக மோதுகிறது.