மதிமுகவிற்கு 6 இடங்களை ஒதுக்கிய திமுக! உதய சூரியன் சின்னத்தில் போட்டியிட முடிவு

 

மதிமுகவிற்கு 6 இடங்களை ஒதுக்கிய திமுக! உதய சூரியன் சின்னத்தில் போட்டியிட முடிவு

தமிழக தேர்தலை முண்ணனி கட்சிகளான திமுகவும் அதிமுகவும் கூட்டணிக் கட்சிகளுடன் தொகுதிப் பங்கீடு குறித்த பேச்சுவார்த்தையில் தீவிரமாக ஈடுபட்டுவருகின்றன. இருதரப்பிலுமே இறுதிமுடிவு எட்டப்படாமல் தொடர்ந்து இழுபறியாகவே சென்றுகொண்டிருக்கிறது. அதிமுகவுக்கு தேமுக கூடவும், திமுகவுக்கு காங்கிரஸ் உள்ளிட்ட கூட்டணி கட்சிகள் கூடவும் தொகுதி பங்கீடு இழுபறியாகவே உள்ளது. இரண்டு கட்ட பேச்சுவார்த்தைக்கு பின்னர் மதிமுக- திமுக உடனான தொகுதி பங்கீடு இறுதி கட்டத்தை எட்டியுள்ளது.

மதிமுகவிற்கு 6 இடங்களை ஒதுக்கிய திமுக! உதய சூரியன் சின்னத்தில் போட்டியிட முடிவு

மதிமுக 10 தொகுதிகள் வரை எதிா்பாா்த்த நிலையில், சட்டமன்ற தேர்தலில் மதிமுகவிற்கு 6 இடங்களை ஒதுக்க திமுக முன்வந்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 6 இடங்களிலும் உதய சூரியன் சின்னத்தில் போட்டியிட மதிமுக ஒப்புதல் அளித்திருப்பதாகவும் கூறப்படுகிறது.

திமுக கூட்டணியில் இதுவரை 5 கட்சிகளுடன் தொகுதி பங்கீடு உடன்பாடு ஏற்பட்டுள்ளது. இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சிக்கு 3 தொகுதிகளையும், மனித நேய மக்கள் கட்சிக்கு 2 தொகுதிகளையும், விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு 6 தொகுதிகளையும் திமுக ஒதுக்கீடு செய்துள்ளது. இதேபோல் இந்திய கம்யூனிஸ்ட் மற்றும் மதிமுக கட்சிகளுக்கு தலா 6 தொகுதிகளை திமுக ஒதுக்கியுள்ளது. காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகளுடன் திமுக தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்திவருகிறது.