வைகோ உடன் ஒப்பந்தம் கையெழுத்தானது… மதிமுக 6 இடங்களில் போட்டி!

 

வைகோ உடன் ஒப்பந்தம் கையெழுத்தானது… மதிமுக 6 இடங்களில்  போட்டி!

தொடக்கம் முதலே திமுக-மதிமுக இடையிலான தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை முட்டிக்கொண்டு தான் இருந்தது. முதற்கட்ட பேச்சுவார்த்தையில் இரு குழுக்களும் இடையே கடும் விவாதம் நடந்ததாகக் கூறப்படுகிறது. இதனிடையே மதிமுக கூட்டணியிலிருந்து வெளியேறும் வாய்ப்பு இருப்பதாகவும் தகவல் வெளியானது. மற்ற கட்சிகளைப் போலவே மதிமுகவும் இரட்டை இலக்கத்தில் தொகுதிகள் கேட்டது. இதற்கு திமுக தரப்பு தடாலடியாக மறுத்துள்ளது.

வைகோ உடன் ஒப்பந்தம் கையெழுத்தானது… மதிமுக 6 இடங்களில்  போட்டி!

இம்முறை 180 தொகுதிகளில் போட்டியிடும் முனைப்பில் இருப்பதால் கூட்டணிக் கட்சிகளுக்கு அதிக தொகுதிகளை ஒதுக்கும் மனப்பான்மையில் பேச்சுவார்த்தை நடத்தவில்லை. தாங்கள் கொடுக்கும் தொகுதிகளைப் பெற்றுக்கொள்ளுங்கள் என்பதே அவர்களின் நிலைப்பாடாக இருந்தது. இதுவே மதிமுகவுடனான மோதலுக்குக் காரணம். இச்சூழலில் விசிகவும் இந்திய கம்யுனிஸ்டும் ஆறு தொகுதிகளுக்கு உடன்பட்டதால் மதிமுகவுக்கும் ஒருவித அழுத்தம் உருவாகியிருக்கிறது. இதனால் 8 தொகுதிகளுக்கு இறங்கிவந்தது.

வைகோ உடன் ஒப்பந்தம் கையெழுத்தானது… மதிமுக 6 இடங்களில்  போட்டி!

ஆனால் திமுகவோ ஆறுக்கு மேல் கொடுப்பதை யோசிக்கவே இல்லை என்று கூறப்படுகிறது. இதனால் ஆறு தொகுதிகளுக்கு மதிமுக தரப்பு உடன்பட்டிருக்கிறது. சற்றுமுன் ஸ்டாலின், வைகோ இடையே ஒப்பந்தம் கையெழுத்தானது. காங்கிரஸ் உடனான பேச்சுவார்த்தை தொடர்ந்து இழுபறியிலேயே சென்றுகொண்டிருக்கிறது.