சட்டமன்றத் தேர்தலில் மதிமுக தனிச்சின்னத்தில் போட்டி – வைகோ

 

சட்டமன்றத் தேர்தலில் மதிமுக தனிச்சின்னத்தில் போட்டி – வைகோ

அடுத்த ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்றத் தேர்தலில் மதிமுக தனிச்சின்னத்தில் தான் போட்டியிடும் என வைகோ தெரிவித்துள்ளார்.

2021 ஆம் ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்றத்தேர்தலை எதிர்நோக்கி தமிழகமே காத்துக் கிடக்கிறது. பிரதான கட்சிகளான திமுக மற்றும் அதிமுகவை வழிநடத்திச் சென்ற கருணாநிதியும் ஜெயலலிதாவும் இல்லாமல் நடக்கவுள்ள முதல் சட்டமன்றத் தேர்தல் என்பதால் எந்த கட்சி அரியணை ஏறும் என மக்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர்.

சட்டமன்றத் தேர்தலில் மதிமுக தனிச்சின்னத்தில் போட்டி – வைகோ

இது ஒருபுறமிருக்க அனைத்து கட்சிகளும் களப்பணி மற்றும் தேர்தல் கூட்டணி பணிகளை தொடங்கி விட்டன. சட்டமன்றத் தேர்தலில் நாம் தமிழர் கட்சி தனித்து களம் காணும் என சீமான் அறிவித்திருந்த நிலையில், விடுதலை சிறுத்தைகள் கட்சி தனிச் சின்னத்தில் போட்டியிடவிருப்பதாக தொல். திருமாவளவன் தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில் மதிமுகவும் தனிச் சின்னத்தில் தான் போட்டியிடும் என வைகோ தெரிவித்துள்ளார். மதுரையில் அவர் செய்தியாளர்களை சந்தித்த போது, திமுகவின் உதயசூரியன் சின்னத்தில் மதிமுக போட்டியிட உள்ளதா என கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு, இவ்வாறு வைகோ பதில் அளித்துள்ளார்.