‘ஸ்டெர்லைட் வழக்கு’.. மதிமுக உச்சநீதிமன்றத்தில் கேவியட் மனுத்தாக்கல்

 

‘ஸ்டெர்லைட் வழக்கு’.. மதிமுக உச்சநீதிமன்றத்தில் கேவியட் மனுத்தாக்கல்

ஸ்டெர்லைட் ஆலையை எதிர்த்து தூத்துக்குடியில் நடைபெற்ற போராட்டத்தின் போது 13 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். இந்த சம்பவம் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியதால் தமிழக அரசு ஸ்டெர்லைட் ஆலைக்கு சீல் வைத்தது. இதனை எதிர்த்து வேதாந்தா நிறுவனம் நீதிமன்றத்தில் தொடர்ந்தது. அதே போல மதிமுக தலைவர் வைகோ உள்ளிட்ட 2 பேர் ஸ்டெர்லைட் ஆலையை மூடுமாறு மனு அளித்திருந்தனர். இந்த வழக்குகளின் முடிவுகள் நேற்று முன்தினம் வெளியாகின. அப்போது, ஸ்டெர்லைட் ஆலையை மூடுவதற்கான தடை தொடரும் என நீதிபதிகள் அதிரடி உத்தரவை பிறப்பித்தனர்.

‘ஸ்டெர்லைட் வழக்கு’.. மதிமுக உச்சநீதிமன்றத்தில் கேவியட் மனுத்தாக்கல்

இந்த தீர்ப்பு பல தரப்பினரிடையே வரவேற்பை பெற்றது. ஆனால், இந்த தீர்ப்பு தங்களுக்கு அதிர்ச்சி அளிப்பதாக கூறிய ஸ்டெர்லைட் சிஇஓ சட்ட ரீதியான போராட்டத்தை தொடருவோம் என கூறினார். அதனால் ஸ்டெர்லைட் சார்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தால், எங்களது கருத்துக்களையும் கேட்கக்கோரி தமிழக அரசும் தூத்துக்குடி மக்கள் அதிகார அமைப்பினரும் உச்சநீதிமன்றத்தில் கேவியட் மனு தாக்கல் செய்திருந்தனர். இந்த நிலையில் மதிமுக சார்பிலும் உச்சநீதிமன்றத்தில் கேவியட் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. ஸ்டெர்லைட் ஆலை வழக்கில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோவிற்கு பெரும்பங்கு இருப்பது குறிப்பிடத்தக்கது.