வெயிட் பார்ட்டிகளை களமிறக்கும் வைகோ! மதிமுக வேட்பாளர் பட்டியல் அறிவிப்பு

 

வெயிட் பார்ட்டிகளை களமிறக்கும் வைகோ! மதிமுக வேட்பாளர் பட்டியல் அறிவிப்பு

தமிழக தேர்தலை முண்ணனி கட்சிகளான திமுகவும் அதிமுகவும் கூட்டணிக் கட்சிகளுடன் தொகுதிப் பங்கீடு ஒருவழியாக முடிவடைந்தது. திமுக கூட்டணியில் உள்ள மதிமுக 10 தொகுதிகள் வரை எதிா்பாா்த்த நிலையில், சட்டமன்ற தேர்தலில் மதிமுகவிற்கு 6 இடங்களை மட்டுமே திமுக ஒதுக்கியது. மதிமுகவுக்கு சாத்தூர், பல்லடம், மதுரை தெற்கு, வாசுதேவநல்லூர்(தனி), மதுராந்தகம்(தனி), அரியலூர் ஆகிய தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. இந்த 6 தொகுதிகளிலும் மதிமுக உதயசூரியன் சின்னத்திலேயே போட்டியிடவுள்ளது.

வெயிட் பார்ட்டிகளை களமிறக்கும் வைகோ! மதிமுக வேட்பாளர் பட்டியல் அறிவிப்பு

ம.தி.மு.க. வேட்பாளர் பட்டியல்

மதுராந்தகம் – மல்லை சத்யா

சாத்தூர் – ரகுராம்

வாசுதேவநல்லூர் – சதன் திருமலைகுமார்

பல்லடம் – முத்து ரத்தினம்

அரியலூர் – சின்னப்பா

மதுரை தெற்கு – பூமிநாதன்

மேற்கண்ட இந்த ம.தி.மு.க. வேட்பாளர்கள் 6 பேரும் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுகின்றனர்