‘திமுகவுக்காக கடலில் மிதந்து வாக்கு சேகரிப்பு’…ரூம் போட்டு யோசிப்பாங்களோ!

‘திமுகவுக்காக கடலில் மிதந்து வாக்கு சேகரிப்பு’…ரூம் போட்டு யோசிப்பாங்களோ!

தமிழகத்தில் வரும் 6ம் தேதி ஒரே கட்டமாக சட்டமன்றத் தேர்தல் நடக்கவிருக்கிறது. தேர்தலில் வெற்றி வாகையை சூட அரசியல் கட்சிகள் அனைத்தும் தீவிரமாக வாக்கு சேகரித்துக் கொண்டிருக்கின்றன. துணி துவைத்து வாக்கு சேகரிப்பது, தோசை சுட்டு வாக்கு சேகரிப்பது, மக்களுடன் நடனமாடி வாக்கு சேகரிப்பது என வழக்கமான அரசியல் நாடகங்களை வேட்பாளர்கள் அரங்கேற்றிக் கொண்டிருக்கின்றனர்.

‘திமுகவுக்காக கடலில் மிதந்து வாக்கு சேகரிப்பு’…ரூம் போட்டு யோசிப்பாங்களோ!

இந்த நிலையில், ராமநாதபுரம் மாவட்டத்தில் திமுக வேட்பாளர்களுக்காக கூட்டணி கட்சியான மதிமுகவினர் பாம்பன் கடலில் மிதந்து வாக்கு சேகரித்த புகைப்படம் வைரலாகி வருகிறது. அம்மாவட்டத்தின் 4 தொகுதிகளிலும் தீவிரமாக பிரச்சாரங்கள் நடைபெற்று வருகிறது. ராமநாதபுரம் தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் காதர்பாட்சாவை ஆதரித்து மதிமுக தொண்டர்கள், பாம்பன் கடலில் மிதந்த படி வாக்கு சேகரித்தனர்.

‘திமுகவுக்காக கடலில் மிதந்து வாக்கு சேகரிப்பு’…ரூம் போட்டு யோசிப்பாங்களோ!

கைகளில் திமுக பதாகைகளை ஏந்திய படி சுமார் 6 மணி நேரம் கடலில் மிதந்து வாக்கு சேகரித்தனர். மீனவரணி மாநில துணைச்செயலாளர் சின்னத்தம்பி தலைமையில் இந்த நூதன பிரச்சாரம் நடைபெற்று வருகிறது. திமுகவுக்கு ஆதரவாக மதிமுகவினர் மேற்கொண்ட இந்த பிரச்சாரம் மீனவர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது.