மருத்துவக் கலந்தாய்வு வரும் 21 ஆம் தேதி நடைபெறும்!

 

மருத்துவக் கலந்தாய்வு வரும் 21 ஆம் தேதி நடைபெறும்!

தமிழகத்தில் எம்.பி.பி.எஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கான கலந்தாய்வில் பங்கேற்க விரும்பும் மாணவர்கள் கடந்த 3 ஆம் தேதி முதல் 12ம் தேதி வரை tnmedicalselection.org என்ற இணைய தளத்தில் விண்ணப்பிக்கலாம் என்றும் 7.5% இட உள் ஒதுக்கீடு மாணவர்கள் தனி விண்ணப்பம் செய்யலாம் என்றும் அறிவிக்கப்பட்டது. இதனையடுத்து மருத்துவ படிப்பில் சேர விரும்பிய மாணவர்கள் விண்ணப்பித்திருந்தனர். இதனையடுத்து மருத்துவ படிப்புக்கு தேர்தெடுக்கப்படும் மாணவர்களின் தரவரிசை பட்டியல் 16ம் தேதி வெளியிடப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பு, 7.5% உள் ஒதுக்கீடு காரணமாக ஜுனில் நடக்க வேண்டிய கலந்தாய்வு தாமதமாக நடைபெறுவதாகவும் 26 அரசு மருத்துவக் கல்லூரிகளில் 3,650 இடங்களும் தனியார் கல்லூரிகளில் 1,052 இடங்களும் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மருத்துவக் கலந்தாய்வு வரும் 21 ஆம் தேதி நடைபெறும்!

இந்நிலையில் சிறப்புப் பிரிவினர் மற்றும் மாற்றுத் திறனாளிகள், முன்னாள் படைவீரர்களின் வாரிசுகள், விளையாட்டுப் பிரிவினருக்கான கலந்தாய்வு 21-ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. சிறப்புப் பிரிவினருக்கான தரவரிசைப் பட்டியல், இணையதளத்தில் வெளியிடப்படும் என மருத்துவ மாணவர் சேர்க்கைக் குழு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.