நேர்காணலுக்கு வராத சைதை துரைசாமி வேட்பாளராக அறிவிப்பு!

 

நேர்காணலுக்கு வராத சைதை துரைசாமி வேட்பாளராக அறிவிப்பு!

அதிமுக ஏற்கனவெ ஆறு நட்சத்திர வேட்பாளர்களின் பட்டியலை வெளியிட்டிருந்தது. தற்போது 171 பேர் கொண்ட இரண்டாம் கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளது. இதன்மூலம் 177 இடங்களில் அதிமுக போட்டியிடுவது உறுதியாகியுள்ளது. முன்னாள் அமைச்சர்கள் பலருக்கும் இம்முறையும் தேர்தலில் போட்டியிட வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது. அமைச்சர்கள் பாஸ்கரன், நிலோபர் கபில், வளர்மதி ஆகிய மூவரும் வேட்பாளராக அறிவிக்கப்படவில்லை.

கட்சிலிருந்து ஒதுங்கி இருந்த அதிமுக வேட்பாளர் நேர்காணலில் இடம்பெறாத சென்னை முன்னாள் மாநகராட்சி மேயர் சைதை துரைசாமிக்கு சைதாப்பேட்டை வேட்பாளராக வாய்ப்பு வழங்கி உள்ளது. மேயர் துரைசாமி தரப்பில் சட்டமன்ற தேர்தலில் போட்டியிட விருப்பமனு அளித்திருந்தாலும், அவர் நேர்காணலில் பங்கேற்கவில்லை எனக் கூறப்படுகிறது. இருப்பினும் அவருக்கு வேட்பாளர் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

முன்னதாக ரஜினி அரசியல் கட்சி தொடங்குவது குறித்து கருத்து தெரிவித்ஹ்ட பெருநகர சென்னை மாநகராட்சியின் முன்னாள் மேயர் சைதை துரைசாமி, “புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர் வழியில் தொடரட்டும் ரஜினியின் பணி” என ஆதரவு தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடதக்கது.