’ஒருவேளை ஜோ பைடன் வென்றுவிட்டால்…’ அதிபர் ட்ரம்ப் அதிரடி அறிவிப்பு

 

’ஒருவேளை ஜோ பைடன் வென்றுவிட்டால்…’ அதிபர் ட்ரம்ப் அதிரடி அறிவிப்பு

உலகமே உற்றுநோக்கும் அமெரிக்காவில் அதிபர் தேர்தல் நடக்க இன்னும் ஓரிரு வாரங்களே உள்ளன. அதனால், தேர்தல் பிரசாரத்தில் அனல் பறக்கிறது. குடியரசுக் கட்சி சார்ப்பில் தற்போதைய அதிபர் டொனால்டு ட்ரம்ப் மீண்டும் அதிபர் போட்டியில் குதிக்கிறார். ஜனநாயக் கட்சியின் சார்பில் அமெரிக்க அதிபர் வேட்பாளராகப் போட்டியிடுகிறார் ஜோ பிடன். துணை அதிபராக ஜனநாயகக் கட்சியின் சார்பில் போட்டியிட இந்திய வம்சாவளி பெண் கமலா ஹாரீஸைத் தேர்வு செய்யப்படிருக்கிறார்.

’ஒருவேளை ஜோ பைடன் வென்றுவிட்டால்…’ அதிபர் ட்ரம்ப் அதிரடி அறிவிப்பு

அமெரிக்க அதிபர் ட்ரம்ப், தனது பிரசாரத்தில் தொடக்கம் முதலே ஜோ பைடனை சீனா ஆதரவாளராகக் காட்டி வருகிறார். ஜோ பைடனின் வெற்றி சீனாவின் வெற்றி என்றே பல மேடைகளில் பேசி வருகிறார் ட்ரம்ப்.
சில நாட்களுக்கு முன் ஒரு விவாதத்தில் கலந்துகொண்ட ஜனநாயக் கட்சியின் துணை அதிபர் வேட்பாளரான கமலா ஹாரீஸ், ‘கொரோனாவை எதிர்கொள்ள ட்ரம்ப் அரசிடம் எவ்வித திட்டமும் இல்லை. அமெரிக்காவில் இதுவரை 70 லட்சம் பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள்” என்று கூறியிருந்தார்.

இதற்குப் பதில் சொல்லுவிதமாக, துணை அதிபர் வேட்பாளர் கமலா ஹாரீஸ் ஒரு கம்யூனிஸ்ட் என்று கூறினார். ஜோ பைடன் வெற்றிபெற்றாலும் சில மாதங்களில் கமலா ஹாரீஸ்தான் அதிபராகி விடுவார் என்றும் தெரிவித்து வருகிறார்.

’ஒருவேளை ஜோ பைடன் வென்றுவிட்டால்…’ அதிபர் ட்ரம்ப் அதிரடி அறிவிப்பு

இந்நிலையில் நேற்று தனது பிரசாரத்தின்போது, “ஜோ பைடன் ஒருவேளை வென்று அதிபராகி விட்டால், நான் நாட்டை விட்டு வெளியேறுவதே நல்லது” என்று அதிரடியாகப் பேசியுள்ளார். இது அமெரிக்காவில் புதிய சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.

பல தேர்தல் கணிப்புகளில் ட்ரம்பை விட ஜோ பைடனுக்கு ஆதரவு அதிகளவில் இருப்பதை இந்நேரத்தில் நினைவுகொள்ள வேண்டும்.