விவசாயிகள் கூட்டத்தில் இந்து-முஸ்லிம் ஒற்றுமைக்காக எழுப்பப்பட்ட முழக்கம்.. மாயாவதி வரவேற்பு

விவசாயிகள் கூட்டத்தில் இந்து-முஸ்லிம் ஒற்றுமைக்காக எழுப்பப்பட்ட முழக்கம்.. மாயாவதி வரவேற்பு

விவசாயிகளின் மெகா கூட்டத்தில் கலந்து கொண்ட அனைத்து விவசாயிகளும் அல்லா ஹு அக்பர், ஹர ஹர மகாதேவ் என்று முழக்கமிட்டதை பகுஜன் சமாஜ் கட்சி தலைவி மாயாவதி வரவேற்றுள்ளார்.

உத்தர பிரதேசத்தின் முசாபர்நகர் மாவட்டத்தில் விவசாயிகளின் மெகா கூட்டம் கடந்த ஞாயிற்றுக்கிழமை நடந்தது. இந்த கூட்டத்தில் பாரதிய கிசான் சங்கத்தின் தலைவர் ராகேஷ் டிக்கைட் கலந்து கொண்டார். விழா மேடையில் ராகேஷ் டிக்கைட் பேசுகையில், நமது ஒற்றுமையை காட்டுவதற்காக அல்லா ஹு அக்பர் மற்றும் ஹர ஹர மகாதேவ் என்று சொல்லும்படி அங்கு கூடியிருந்த விவசாயிகளை வலியுறுத்தினார். இதனையடுத்து அந்த கூட்டத்தில் கலந்து கொண்டவர்கள் அனைவரும் அல்லா ஹு அக்பர், ஹர ஹர மகாதேவ் என்று முழக்கமிட்டனர்.

விவசாயிகள் கூட்டத்தில் இந்து-முஸ்லிம் ஒற்றுமைக்காக எழுப்பப்பட்ட முழக்கம்.. மாயாவதி வரவேற்பு
விவசாயிகளின் மெகா கூட்டம் (கோப்புப்படம்)

விவசாயிகள் கூட்டத்தில் இந்து-முஸ்லிம் ஒற்றுமைக்காக எழுப்பப்பட்ட முழக்கங்களை பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவர் மாயாவதி வரவேற்றுள்ளார். இது தொடர்பாக மாயாவதி தனது டிவிட்டர் பக்கத்தில், உத்தர பிரதேசத்தின் முசாபர்நகர் மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற விவசாயிகளின் மெகா கூட்டத்தின்போது இந்து-முஸ்லிம் மத நல்லிணக்கத்திற்கான முயற்சிகள், 2013ல் சமாஜ்வாடி அரசாங்கத்தின்போது நடந்த கொடூர கலவரங்களின் ஆழமான காயங்களை குணப்படுத்த நிச்சயமாக உதவும்.

விவசாயிகள் கூட்டத்தில் இந்து-முஸ்லிம் ஒற்றுமைக்காக எழுப்பப்பட்ட முழக்கம்.. மாயாவதி வரவேற்பு
பா.ஜ.க.

இது பலருக்கு அசவுகரியத்தை ஏற்படுத்தும். விவசாயிகள் நாட்டின் பெருமை. விவசாயிகள் கூட்டத்தில் வகுப்புவாத நல்லிணக்க முழக்கங்களுடன், வெறுப்புடன் உருவாக்கப்பட்ட பா.ஜ.க.வின் அரசியல் தளம நழுவ தொடங்கியது என்று பதிவு செய்து இருந்தார். 2013ல் முசாபர்நகரில் நடைபெற்ற கலவரத்தில் மொத்தம் 62 பேர் பலியாகியது குறிப்பிடத்தக்கது.