நீட் விவகாரத்தில் அமைதி…. அன்லாக் 4க்கு வரவேற்பு…. பா.ஜ.க.வை எதிர்க்க விரும்பாத மாயாவதி…

நீட் விவகாரத்தில் அமைதி…. அன்லாக் 4க்கு வரவேற்பு…. பா.ஜ.க.வை எதிர்க்க விரும்பாத மாயாவதி…

உத்தர பிரதேசத்தின் முன்னாள் முதல்வர் மாயாவதியின் அண்மைகால செயல்பாடுகள் அவா் பா.ஜ.க.வை பகைத்து கொள்ள விரும்பவில்லை என்பது போல் தெரிவதாக அரசியல் வட்டராங்கள் தெரிவித்தன.

பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதியின் தற்போதைய செயல்பாடுகள் அனைத்தும் பா.ஜ.க.வை அவர் எதிர்க்க விரும்பவில்லை என்பதை வெளிப்படுத்துவது போல் உள்ளது. நீட் உள்ளிட்ட நுழைவு தேர்வுகளை ஒத்திவைக்க வேண்டும் என எதிர்கட்சிகள் குரல் கொடுத்து வரும் வேளையில் மாயாவதி அமைதியாக இருந்தார். தற்போது மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அன்லாக்-4 வழிகாட்டுதல்களை வரவேற்றுள்ளார்.

நீட் விவகாரத்தில் அமைதி…. அன்லாக் 4க்கு வரவேற்பு…. பா.ஜ.க.வை எதிர்க்க விரும்பாத மாயாவதி…
மாயாவதி

பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி நேற்று டிவிட்டரில், அனைத்து மாநிலங்களுக்குமான லாக்டவுன் தளர்வுகள் (அன்லாக் 4) தொடர்பான மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள பொதுவான வழிகாட்டுதல்கள் வரவேற்கத்தக்க நடவடிக்கையாகும். இது பகுஜன் சமாஜ் கட்சியால் கடந்த காலத்தில் கோரப்பட்டது. இது கோவிட்-19ன் திரையின் கீழ் அரசியல் செய்யப்படுவதை நிறுத்தி, இந்த கடினமான காலங்களில் மக்களுக்கு உதவும் என டிவிட் செய்து இருந்தார்.

நீட் விவகாரத்தில் அமைதி…. அன்லாக் 4க்கு வரவேற்பு…. பா.ஜ.க.வை எதிர்க்க விரும்பாத மாயாவதி…
அன்லாக் 4.0

கடந்த சில தினங்களுக்கு முன் மாயாவதி பேட்டி ஒன்றில், நீட் மற்றும் ஜே.இ.இ. தேர்வுகளை எழுதப்போகும் லட்டசக்கணக்கான மாணவர்கள் தங்களை சிறந்த முயற்சியில் ஈடுபடுத்தி, தேர்வுகளுக்கு நன்கு தயார் செய்ய நான் சொல்ல விரும்புகிறேன். மேலும் கோவிட்-19 தொற்றுநோய் மத்தியில் அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் எடுத்து பரீட்சைகளை பாதுகாப்பாக நடத்துவதை உறுதி செய்யுமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் நான் கேட்க விரும்புகிறேன் என தெரிவித்து இருந்தார்.