தொழிலாளர்களுக்கு போதுமான வாய்ப்பு கொடுங்க… மத்திய, மாநில அரசுகளுக்கு மாயாவதி வேண்டுகோள்..

தொழிலாளர்களுக்கு போதுமான வாய்ப்பு கொடுங்க… மத்திய, மாநில அரசுகளுக்கு மாயாவதி வேண்டுகோள்..

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின்கீழ் வேலைபார்க்கும் தொழிலாளர்களுக்கு போதுமான வேலைவாய்ப்பு வழங்க வேண்டும் மத்திய, மாநில அரசுகளுக்கு மாயாவதி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

உத்தர பிரதேசத்தின் முன்னாள் முதல்வரும் பகுஜன் சமாஜ் கட்சி தலைவியுமான மாயாவதி தனது டிவிட்டரில், நாட்டில் கோடிக்கணக்கான தொழிலாளர்கள் கஷ்டங்களில் உள்ளபோதிலும், அவர்கள் கடின உழைப்பால் ரொட்டியை சாப்பிடும் பாரம்பரியத்தில் உறுதியாக உள்ளனர் என்பதை புள்ளிவிவரங்கள் வெளிப்படுத்துகின்றன.

தொழிலாளர்களுக்கு போதுமான வாய்ப்பு கொடுங்க… மத்திய, மாநில அரசுகளுக்கு மாயாவதி வேண்டுகோள்..
மாயாவதி

குறிப்பாக பீகார் மற்றும் உத்தர பிரதேசத்தில் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின்கீழ் (எம்.என்.ஆர்.இ.ஜி.ஏ.) வேலைபார்த்து தங்களது குடும்பங்களுக்கு உணவளித்து வருகின்றனர். அவர்களுக்கு மத்திய அரசும் மாநில அரசும் போதுமான வாய்ப்புகளை வழங்க வேண்டும். என பதிவு செய்து இருந்தார். மாயாவதி முன்பு போல் பா.ஜ.க. அரசை கடுமையாக விமர்சிப்பதை என்ற கருத்து பரவலாக உள்ளது.

தொழிலாளர்களுக்கு போதுமான வாய்ப்பு கொடுங்க… மத்திய, மாநில அரசுகளுக்கு மாயாவதி வேண்டுகோள்..
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டம்

உதாரணமாக கடந்த மாத இறுதியில் பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி டிவிட்டரில், அனைத்து மாநிலங்களுக்குமான லாக்டவுன் தளர்வுகள் (அன்லாக் 4) தொடர்பான மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள பொதுவான வழிகாட்டுதல்கள் வரவேற்கத்தக்க நடவடிக்கையாகும். இது பகுஜன் சமாஜ் கட்சியால் கடந்த காலத்தில் கோரப்பட்டது. இது கோவிட்-19ன் திரையின் கீழ் அரசியல் செய்யப்படுவதை நிறுத்தி, இந்த கடினமான காலங்களில் மக்களுக்கு உதவும் என டிவிட் செய்து இருந்தது குறிப்பிடத்தக்கது.