சட்டவிரோத வெளிநாட்டவர்களுக்கான தடுப்புகாவல் மையமாக அம்பேத்கர் மாணவர் விடுதி மாற்றம்.. மாயாவதி கண்டனம்

சட்டவிரோத வெளிநாட்டவர்களுக்கான தடுப்புகாவல் மையமாக அம்பேத்கர் மாணவர் விடுதி மாற்றம்.. மாயாவதி கண்டனம்

உத்தர பிரதேசத்தில், சட்டவிரோத வெளிநாட்டவர்களுக்கான தடுப்புகாவல் மையங்களாக அம்பேத்கர் மாணவர் விடுதி மாற்றப்பட்டுவதற்கு மாயாவதி கண்டனம் தெரிவித்துள்ளார்.

நம் நாட்டில் சட்டவிரோதமாக தங்கி உள்ள வெளிநாட்டவர்களை கண்டுபிடித்து அவர்களை அவர்களது சொந்த நாட்டுக்கு அனுப்பி வைக்கும் நடவடிக்கையில் மத்திய மற்றும் மாநில அரசுகள் களம் இறங்கி உள்ளன. சட்டவிரோத வெளிநாட்டவர்களை தங்க வைப்பதற்காக தடுப்பு காவல் மையங்கள் ஏற்படுத்தப்பட்டு வருகின்றன. உத்தர பிரதேசத்தில் காஜியாபாத்தில் உள்நாட்டில் சட்டவிரோதமாக தங்கியிருக்கும் வெளிநாட்டவருக்கான தடுப்புகாவல் மையம் வரும் வாரங்களில் செயல்பட உள்ளது. முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான அமமாநில அரசு அந்நகரில் உள்ள அம்பேத்கர் விடுதியை தடுப்புகாவல் மையமாக மாற்றியுள்ளது. இதற்கு தற்போது கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

சட்டவிரோத வெளிநாட்டவர்களுக்கான தடுப்புகாவல் மையமாக அம்பேத்கர் மாணவர் விடுதி மாற்றம்.. மாயாவதி கண்டனம்
மாயாவதி

பகுஜன் சமாஜ் கட்ச தலைவர் மாயாவதி இது குறித்து கூறுகையில், சட்டவிரோத வெளிநாட்டவருக்கான தடுப்பு மையங்களாக பகுஜன் சமாஜ் கட்சி அரசாங்கத்தால் கட்டப்பட்ட காஜியாபாத்தின் பல மாடி டாக்டர் அம்பேத்கர் எஸ்.சி. மற்றும் எஸ்.டி. மாணவர் விடுதி மாற்றுவது வருத்தமளிக்கிறது மற்றும் மிகவும் கண்டிக்கத்தக்கது. இது அரசாங்கத்தின் தலித் எதிர்ப்பு செயல்பாட்டு பாணிக்கு மாற்றொரு சான்றாகும்.

சட்டவிரோத வெளிநாட்டவர்களுக்கான தடுப்புகாவல் மையமாக அம்பேத்கர் மாணவர் விடுதி மாற்றம்.. மாயாவதி கண்டனம்
மாணவர் விடுதி

இதனை உடனடியாக திரும்ப வேற வேண்டும் என பகுஜன் சமாஜ் கட்சி கோரிக்கை விடுக்கிறது என அவர் தெரிவித்தார். அரசு அதிகாரிகள் இது குறித்து கூறுகையில், தடுப்பு மையங்களாக மாற்றுவதற்கு தேவையான சில மாற்றங்கள் அந்த விடுதியில் மேற்கொள்ளப்பட்டுள்ளன என தெரிவித்தனர். இது வெளிநாட்டினரை அவர்களது சொந்த நாடுகளுக்கு நாடு கடத்த வேண்டிய தடுப்புகாவல் மையங்களாக செயல்படும்.