எனக்கு என்னவோ அவங்க 2 பேரும் மேலயும் சந்தேகம் இருக்கு… சச்சின், கெலாட் சேர்ந்தது குறித்து மாயாவதி

எனக்கு என்னவோ அவங்க 2 பேரும் மேலயும் சந்தேகம் இருக்கு… சச்சின், கெலாட் சேர்ந்தது குறித்து மாயாவதி

ராஜஸ்தானில் முதல்வர் அசோக் கெலாட்டுக்கு எதிராக சச்சின் பைலட் மற்றும் அவரது ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் போர்க்கொடி தூக்கியதால் காங்கிரஸ் அரசுக்கு நெருக்கடி ஏற்பட்டது. இதனால் கடந்த ஒரு மாத காலமாக ராஜஸ்தான் அரசியல் மிகவும் பரபரப்பாக இருந்தது. இந்த சூழ்நிலையில், நேற்று முன்தினம் டெல்லியில் காங்கிரஸ் தலைவர்கள் ராகுல் காந்தி, பிரியங்கா காந்தியை சச்சின் பைலட் சந்தித்ததையடுத்து ராஜஸ்தான் அரசுக்கு இருந்த சிக்கல் தீர்ந்தது.

எனக்கு என்னவோ அவங்க 2 பேரும் மேலயும் சந்தேகம் இருக்கு… சச்சின், கெலாட் சேர்ந்தது குறித்து மாயாவதி

ஆனால் பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதியோ அசோக் கெலாட்-சச்சின் பைலட் இணைந்தது குறித்து சந்தேகம் கிளப்பியுள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது: ராஜஸ்தானில் காங்கிரஸ் அரசாங்கம் இப்போது பாதுகாப்பாக இருப்பதாக தெரிகிறது ஆனால் பைலட்டுக்கும், அசோக் கெலாட்டுக்கும் இடையிலான நாடகம் எப்போது மீண்டும் தொடங்கும் என கூற முடியாது. அந்த இருவருக்கும் இடையிலான நீண்ட கால உள்கட்சி மோதல்கள் மக்கள் நலப்பணிகளை பாதித்துள்ளன என பகுஜன் சமாஜ் கட்சி கூற விரும்புகிறது.

எனக்கு என்னவோ அவங்க 2 பேரும் மேலயும் சந்தேகம் இருக்கு… சச்சின், கெலாட் சேர்ந்தது குறித்து மாயாவதி

மாநிலத்தின் நிலைமையை ஆராய்ந்து தனது அரசியலமைப்பு பொறுப்பை நிறைவேற்றுமாறு ராஜஸ்தான் கவர்னரிடம் கேட்டுக்கொள்கிறேன். நாட்டில் கொரோனா வைரஸ் பரவலாக இருக்கும் நேரத்தில் அரசாங்கம் தனது மக்கள் மீது கவனம் செலுத்த வேண்டும். கொரோனாவை எதிர்ப்பத்தில் அரசு தீவிரமாக இல்லை என நான் நினைக்கிறேன். பொது நலப்பணிகளும் பாதிக்கப்பட்டுள்ளன. எதிர்காலத்திலும் இது நடக்க வாய்ப்புகள் உள்ளன என நான் நினைக்கிறேன். இவ்வாறு அவர் தெரிவித்தார்.