அகிலேஷ் கட்சி வேட்பாளரை தோற்கடிக்க பா.ஜ.க.வுக்கு கூட ஓட்டு போடுவோம்… மாயாவதி ஆவேசம்

 

அகிலேஷ் கட்சி வேட்பாளரை தோற்கடிக்க பா.ஜ.க.வுக்கு கூட ஓட்டு போடுவோம்… மாயாவதி ஆவேசம்

மாநிலங்களை உறுப்பினருக்கான தேர்தலில் அகிலேஷ் யாதவ் கட்சி (சமாஜ்வாடி) வேட்பாளரை தோற்கடிக்க பா.ஜ.க.வுக்கு கூட ஓட்டு போடுவோம் என மாயாவதி தெரிவித்தார்.

உத்தர பிரதேசத்திலிருந்து காலியாக உள்ள 10 மாநிலங்களவை உறுப்பினர்களுக்கான தேர்தல் வரும் நவம்பர் 9ம் தேதி நடைபெற உள்ளது. பா.ஜ.க. வேட்பாளர்கள் 8 பேர் உள்பட மொத்தம் 11 பேர் வேட்புமனு தாக்கல் செய்து இருந்தனர். அதில் மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சி வேட்பாளர் ராம்ஜி கவுதமும் அடங்குவார். தனது வேட்பாளரை வெற்றி பெற செய்ய மாயாவதி கட்சிக்கு போதிய எம்.எல்.ஏ.க்கள் பலம் இல்லை என்ற போதிலும், பா.ஜ.க. அல்லாத கட்சிகள் ஆதரவு அளிக்கும் என்ற நம்பிக்கையில் வேட்புமனு தாக்கல் செய்தது.

அகிலேஷ் கட்சி வேட்பாளரை தோற்கடிக்க பா.ஜ.க.வுக்கு கூட ஓட்டு போடுவோம்… மாயாவதி ஆவேசம்
மாயாவதி

ஆனால் நடந்தது வேறு. பகுஜன் சமாஜ் கட்சி எம்.எல்.ஏ.க்களில் 7 பேர் கட்சியின் மாநிலங்களவை வேட்பாளருக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் அவர்களில் 4 பேர், ராம்ஜி கவுதம் தாக்கல் செய்துள்ள வேட்புமனுவில் உள்ள கையெழுத்து எங்களுடையது அல்ல அது போலி என்று ரிட்டனிங் அதிகாரியிடம் பிரமாண பத்திரம் தாக்கல் செய்தனர். இருப்பினும் அதிகாரி அந்த வேட்புமனுவை ஏற்றுக்கொண்டார். கட்சி வேட்பாளருக்கு எதிர்ப்பு தெரிவித்த பகுஜன் சமாஜ் கட்சி அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் 7 பேரையும் மாயாவதி கட்சியிலிருந்து சஸ்பெண்ட் செய்தார். அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் நேற்று சமாஜ்வாடி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவை நேற்று சந்தித்தனர். இதனால் அவர்கள் கட்சி தாவலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

அகிலேஷ் கட்சி வேட்பாளரை தோற்கடிக்க பா.ஜ.க.வுக்கு கூட ஓட்டு போடுவோம்… மாயாவதி ஆவேசம்
அகிலேஷ் யாதவ்

இந்த சூழ்நிலையில் சமாஜ்வாடி கட்சியை தோற்கடிக்க பா.ஜ.க.வுக்கு கூட ஓட்டு போடுவோம் என மாயாவதி தெரிவித்துள்ளார். இது குறித்து மாயாவதி கூறுகையில், உத்தர பிரதேசத்தில் எதிர்கால எம்.எல்.சி. தேர்தலில் சமாஜ்வாடி கட்சி வேட்பாளரை நாங்கள் தோற்கடிக்க முடிவு செய்துள்ளோம். நாங்கள் எங்கள் முழு சக்தியையும் பயன்படுத்துவோம். பா.ஜ.க. வேட்பாளருக்கோ அல்லது பிற கட்சி வேட்பாளர்களுக்கோ நாங்கள் வாக்களிக்க வேண்டியது வந்தால் அதை செய்வோம். சமாஜ்வாடி கட்சியின் 2வது வேட்பாளரை விட ஆதிக்கம் செலுத்தும் எந்தவொரு கட்சி வேட்பாளரும் பகுஜன் சமாஜ் கட்சி எம்.எல்.ஏ.க்களின் வாக்குகளை பெறுவார் என தெரிவித்தார்.