கேக் கட்டிங்.. கொண்டாட்டம்… ஆடம்பர மதிய உணவு கிடையாது.. மாயாவதி முடிவால் கட்சி தொண்டர்கள் வருத்தம்

 

கேக் கட்டிங்.. கொண்டாட்டம்… ஆடம்பர மதிய உணவு கிடையாது.. மாயாவதி முடிவால் கட்சி தொண்டர்கள் வருத்தம்

பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி இந்த ஆண்டு தனது பிறந்த நாளை (ஜனவரி 15) கொண்டாட வேண்டாம் என்று முடிவு செய்துள்ளார். இதனால் அந்த கட்சி தொண்டர்கள் வருத்தத்தில் உள்ளனர்.

உத்தர பிரதேசத்தின் முன்னாள் முதல்வரும், பகுஜன் சமாஜ் கட்சி தலைவருமான மாயாவதி 1956 ஜனவரி 15ம் தேதியன்று பிறந்தார். ஆகையால் பகுஜன் சமாஜ் கட்சி தொண்டர்கள் ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 15ம் தேதியன்று மாயாவதியின் பிறந்த நாளை சிறப்பாக கொண்டாடுவர். அந்த கட்சியின் அலுவலகத்தில், கொண்டாட்டம், கேக் கட்டிங் மற்றும் தடபுடலான மதிய விருந்து நடக்கும்.

கேக் கட்டிங்.. கொண்டாட்டம்… ஆடம்பர மதிய உணவு கிடையாது.. மாயாவதி முடிவால் கட்சி தொண்டர்கள் வருத்தம்
கேக் வெட்டும் தொண்டர்கள் (கோப்புப்படம்)

இந்நிலையில் மாயாவதி நாளை 65 வயதில் அடியெடுத்து வைக்க உள்ளார். இதனால் பகுஜன் சமாஜ் கட்சி தொண்டர்கள் அவரது பிறந்த நாளை சிறப்பாக கொண்டாட திட்டமிட்டு இருந்தனர். இந்நிலையில் இந்த ஆண்டு தனது பிறந்த நாளை கொண்டாடப் போவதில்லை என்று மாயாவதி முடிவு செய்துள்ளார். அதேசமயம் ஜனவரி 15ம் தேதியை சிக்கன தினமாக கடைப்பிடிக்கும்படி தனது தொண்டர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார். மேலும், ஏழைகளுக்கு போர்வைகள், உடைகள் மற்றும் தேவைப்படும் நபர்களுக்கு முடிந்தால் பண உதவியும் செய்யும்படி தொண்டர்களை வலியுறுத்தியுள்ளார்.

கேக் கட்டிங்.. கொண்டாட்டம்… ஆடம்பர மதிய உணவு கிடையாது.. மாயாவதி முடிவால் கட்சி தொண்டர்கள் வருத்தம்
பகுஜன் சமாஜ் கட்சி

இது தொடர்பாக பகுஜன் சமாஜ் கட்சி வட்டாரங்கள் கூறுகையில், கடந்த ஆண்டு நவம்பரில் தனது தந்தை இறந்தது, கொரோனா வைரஸ் தொற்று நோய் பரவல் மற்றும் வேளாண் சட்டங்களை எதிர்த்து விவசாயிகள் நடத்தி வரும் போன்ற பல்வேறு காரணங்களால் இந்த ஆண்டு தனது பிறந்த நாளை கொண்டாட வேண்டாம் என்று மாயாவதி முடிவு செய்துள்ளார். இதனால் பகுஜன் சமாஜ் கட்சி அலுவலகத்தில் இந்த ஆண்டு கேக் வெட்டுவது, கொண்டாட்டங்கள் மற்றும் ஆடம்பரமான மதிய உணவு உள்ளிட்டவை கிடையாது என்று கட்சி தெரிவித்துள்ளது. மாயாவதி பிறந்த நாளன்று டெல்லியில் இருப்பார் என தெரிகிறது என்று தெரிவித்தன.