உங்க கட்சிகாரங்களோடு எங்க கட்சிகாரங்க மீதான வழக்குகளையும் திரும்ப பெறுங்க.. யோகிக்கு மாயாவதி கோரிக்கை

உங்க கட்சிகாரங்களோடு எங்க கட்சிகாரங்க மீதான வழக்குகளையும் திரும்ப பெறுங்க.. யோகிக்கு மாயாவதி கோரிக்கை

உத்தர பிரதேசத்தில் பா.ஜ.க. தலைவர்கள் மீதான வழக்குகள் திரும்ப பெறப்படுவது போல் எங்க கட்சி உள்பட அனைத்து அனைத்து எதிர்க்கட்சிகளின் தலைவர்கள் மீதான வழக்குகளையும் திரும்ப பெற வேண்டும் என்று அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத்திடம் மாயாவதி கோரிக்கை விடுத்துள்ளார்.

உங்க கட்சிகாரங்களோடு எங்க கட்சிகாரங்க மீதான வழக்குகளையும் திரும்ப பெறுங்க.. யோகிக்கு மாயாவதி கோரிக்கை
முதல்வர் யோகி ஆதித்யநாத்

உத்தர பிரதேசத்தில் முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான பா.ஜ.க. ஆட்சி நடைபெற்று வருகிறது. அம்மாநிலத்தில் பா.ஜ.க. தலைவர்களுக்கு எதிரான போடப்பட்ட வழக்குகள் திரும்ப பெறப்படுவதாக பகுஜன் சமாஜ் கட்சி தெரிவித்துள்ளது. மேலும், பா.ஜ.க. தலைவர்கள் மீதான வழக்குகள் திரும்ப பெறப்படுவதுபோல் பகுஜன் சமாஜ் கட்சி உள்பட அனைத்து எதிர்க்கட்சிகளின் தலைவர்கள் மீது போடப்பட்ட வழக்குகளையும் திரும்ப பெறப்பட வேண்டும் என்று அந்த கட்சி வலியுறுத்தியுள்ளது.

உங்க கட்சிகாரங்களோடு எங்க கட்சிகாரங்க மீதான வழக்குகளையும் திரும்ப பெறுங்க.. யோகிக்கு மாயாவதி கோரிக்கை
எப்.ஐ.ஆர்.

இது தொடர்பாக பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவர் மாயாவதி டிவிட்டரில், பா.ஜ.க. தலைவர்களுக்கு எதிரான வழக்குகள் திரும்ப பெறப்படுவது போல், அரசியல் வன்ம நோக்கத்துடன் அனைத்து எதிர்க்கட்சி தலைவர்களுக்கு எதிராக போடப்பட்ட வழக்குகளையும் திரும்ப பெறப்பட வேண்டும். இது பகுஜன் சமாஜ் கட்சியின் கோரிக்கை என்று பதிவு செய்து இருந்தார்.

முன்னதாக, லவ் ஜிஹாத்துக்கு எதிராக உத்தர பிரதேச பா.ஜ.க. அரசு கொண்டு வந்தள்ள சட்டவிரோத மத மாற்ற தடை அவசர சட்டத்தை (2020) மறுபரிசீலனை செய்யுமாறு மாயாவதி கோரிக்கை விடுத்து இருந்தது குறிப்பிடத்தக்கது. இந்த அவசர சட்டத்தின், ஒருவரை வலுக்கட்டாயமாக மத மாற்றம் செய்தால் குற்றவாளிக்கு அதிகபட்சம் 10 ஆண்டுகள் சிறை மற்றும் அபராதம் விதிக்கப்படும்.