ஹத்ராஸ் பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பத்தினரை என் கட்சிகாரங்கதான் முதலில் சந்தித்தனர்.. மாயாவதி தகவல்

ஹத்ராஸ் பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பத்தினரை என் கட்சிகாரங்கதான் முதலில் சந்தித்தனர்.. மாயாவதி தகவல்

ஹத்ராஸில் பாலியல் பலாத்காரத்துக்கு ஆளாகி இறந்து போன பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பத்தினரை பகுஜன் சமாஜ் கட்சியினர்தான் முதலில் சென்று சந்தித்தனர் அதன் பிறகு ஊடகங்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது என மாயாவதி தெரிவித்துள்ளார்.

ஹத்ராஸ் சம்பவம் தொடர்பாக பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயவாதி டிவிட்டரில் தொடர்ச்சியான டிவிட்டுகளில் தனது கருத்துக்களை பதிவு செய்து இருந்தார். ஒரு டிவிட்டில், ஹத்ராஸ் கும்பல் பாலியல் பலாத்கார மோசடிக்கு பிறகு, பகுஜன் சமாஜ் கட்சியின் குழு கடந்த செப்டம்பர் 28ம் தேதியன்று முதலில் அங்கு சென்று பாதிக்கப்பட்டவரின் குடும்பத்தினரை சந்தித்து சரியான உண்மை நிலவரத்தை தெரிந்து கொண்டது.

ஹத்ராஸ் பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பத்தினரை என் கட்சிகாரங்கதான் முதலில் சந்தித்தனர்.. மாயாவதி தகவல்
மாயாவதி

பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பத்துடன் பேச அவர்கள் காவல் நிலையத்துக்கு அழைக்கப்பட்டனர். பேச்சுவார்த்தைக்கு பிறகு வந்த அறிக்கை (மாயாவதிக்கு கிடைத்த தகவல்) மிகவும் வருத்தமாக இருந்தது. இது என்னை ஊடகங்களுக்கு செல்ல கட்டாயப்படுத்தியது என பதிவு செய்து இருந்தார். மற்றொரு டிவிட்டில், ஊடகங்களுடன் தவறாக நடந்து கொண்டது, நேற்றும் அதற்கு முந்தைய நாளும் எதிர்க்கட்சி தலைவர்கள் மீது போலீசார் நடத்திய தடியடி மிகவும் கண்டிக்கத்தக்கது, வெட்கக்கேடானது.

ஹத்ராஸ் பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பத்தினரை என் கட்சிகாரங்கதான் முதலில் சந்தித்தனர்.. மாயாவதி தகவல்
போலீஸ் தடியடி

அதன் திமிர்பிடித்த மற்றும் சர்வாதிகார அணுகுமுறையை அரசாங்கம் மாற்ற வேண்டும் இல்லையெனில் ஜனநாயகத்தின் வேர்கள் பலவீனமடையும் என பதிவு செய்து இருந்தார். ஹத்ராஸ் பாலியல் பலாத்கார சம்பவம் நாடு முழுவதும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. ஹத்ராஸ் வழக்கை சி.பி.ஐ. விசாரிக்க உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் பரிந்துரை செய்துள்ளார். ஆனால் பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பத்தார் நீதிமன்றம் விசாரிக்க வேண்டும் என வலியுறுத்தி உள்ளனர்.