• November
    20
    Wednesday

Main Area

Main



சேர்ந்து தோக்கவேணாம், தனியாவே தோத்துக்குறேன் - மாயாவதி!

Mayawati
Mayawati

2014ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் உத்தரபிரதேசத்தில் பாஜக பெற்ற பெருவெற்றிதான் அக்கட்சி மத்தியில் ஆட்சி அமைக்கவே வழிவகுத்தது என்பதை மறுப்பாரில்லை. இரு பலமான மாநிலகட்சிகள் இருக்கும்போதும், கூடவே காங்கிரஸையும் எதிர்த்து, பாஜக வெற்றிபெற்றது. எனவே 2019ஆம் ஆண்டு தேர்தலுக்கு உஷாரான மாயாவதியும் அகிலேஷும், இனி தாங்கள் இரு துருவங்கள் இல்லை, ஓர் அணியில் இருந்து பாஜகவை வெல்வோம் என கூட்டணி வைத்தனர். எங்களையும் கூட்டணியில் சேர்த்துக்கொள்ளுங்கள் என்ற காங்கிரஸுக்கு போனால் போகிறதென இரண்டு இடங்களை தருவதாக சொன்னதால், கோபித்துகொண்ட காங்கிரஸ் தனியாக நின்றது. முந்தைய தேர்தலில் நான்கு முனைப்போட்டியாக இருந்தது, 2019-ல் மூன்றுமுனை போட்டியாக சுருங்கினாலும், பாஜகவின் வெற்றிக்கு எவ்வித சேதாரமும் இல்லை.

Akhilesh - Mayawati

பரமவைரிகளான பகுஜன் சமாஜும், சமாஜ்வாதி கட்சியும் இணைந்துமே தேர்தலில் வெற்றி பெற முடியவில்லை. தேர்தலில் மாயாவதிக்கு 10 இடங்களும், அகிலேஷுக்கு 5 இடங்களும் மட்டுமே கிடைத்தன. உத்தர பிரதேசத்தில் பெருவெற்றிப்பெற்று, மூன்றாவது அணியின் சிக்கலுக்குள் அடித்துப்பிடித்து பிரதமராகிவிடலாம் என்ற கனவில் இருந்த மாயாவதிக்கு தேர்தல் முடிவு பேரதிர்ச்சி. சமாஜ்வாதியுடனான கூட்டணியில் எதிர்பார்த்த ரிசல்ட் கிடைக்காததால், இனிமேல் அவர்களுடன் கூட்டணி கிடையாது என அறிவித்துவிட்டார். நம்முடைய சந்தேகம் எல்லாம் என்னவென்றால், பெரும்பான்மையான வாக்குவங்கியை வைத்திருந்த இருகட்சிகளும் இணைந்தே தேர்தலில் வெற்றிபெற முடியவில்லை என்றால், தனித்து எத்தனை தொகுதிகளில் மாயாவதி வெல்லப்போகிறார் என்பதே!
 

2018 TopTamilNews. All rights reserved.