ஹத்ராஸ் பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பத்துக்கு நீதி வழங்குவதில் கவனம் செலுத்துங்க.. யோகியை வலியுறுத்திய மாயாவதி..

ஹத்ராஸ் பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பத்துக்கு நீதி வழங்குவதில் கவனம் செலுத்துங்க.. யோகியை வலியுறுத்திய மாயாவதி..

தவறுகளை சரி செய்து, ஹத்ராஸில் பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பத்துக்கு நீதி வழங்குவதில் கவனம் செலுத்துங்க என உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் அரசை மாயாவதி அறிவுறுத்தியுள்ளார்.

உத்தர பிரதேசம் மாநிலம் பைரோசாபாத்தில் உள்ள துண்ட்லா சட்டப்பேரவை தொகுதிக்கு விரைவில் இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் வீடியோ கான்பரன்சிங் வாயிலாக பா.ஜ.க. கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களுடன் கலந்துரையாடினார். அப்போது அவர், ஹத்ராஸ் பாலியல் பலாத்கார மற்றும் கொலை சம்பவம் மிகவும் வேதனையளிக்கிறது.

ஹத்ராஸ் பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பத்துக்கு நீதி வழங்குவதில் கவனம் செலுத்துங்க.. யோகியை வலியுறுத்திய மாயாவதி..
மாயாவதி

இந்த சம்பவத்தை காரணம் காட்டி எதிர்க்கட்சிகள் மாநில அரசை குறிவைத்து தாக்கி வருகின்றன. மேலும் பல்வேறு அமைப்புகள் உத்தர பிரதேசத்தை சீர்குலைக்க திட்டமிட்டுள்ளன. சாதி மற்றும் வகுப்புவாத ரீதியிலான பிளவை ஏற்படுத்த முயற்சிகள் நடைபெறுகின்றன என தெரிவித்து இருந்தார். முதல்வர் யோகி ஆதித்யநாத்தின் இந்த குற்றச்சாட்டுக்கு பகுஜன் சமாஜ் கட்சி தலைவி மாயாவதி பதிலடி கொடுத்துள்ளார்.

ஹத்ராஸ் பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பத்துக்கு நீதி வழங்குவதில் கவனம் செலுத்துங்க.. யோகியை வலியுறுத்திய மாயாவதி..
`ஹத்ராஸ் பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பத்தினர்

மாயாவதி இது தொடர்பாக டிவிட்டரில், ஹத்ராஸ் வழக்கு போர்வையில் மாநிலத்தின் வளர்ச்சியை பாதிக்க சாதி மற்றும் வகுப்புவாத கலவரங்களை தூண்டுவதற்கு எதிர்க்கட்சிகள் சதி செய்தது என்ற உத்தர பிரதேச அரசின் குற்றச்சாட்டு சரியா அல்லது தேர்தல் தந்திரமா என்பதை காலம் பதில் சொல்லும். ஆனால் ஆனால் பாதிக்கபட்டவரின் குடும்பத்துக்கு நீதி வழங்குவதில் அரசாங்கம் கவனம் செலுத்தினால் நல்லது என்று பொதுமக்கள் கருத்து கோருகிறது என பதிவு செய்து இருந்தார்.