புலம்பெயர்ந்தோரின் அவல நிலைக்கு காங்கிரசும், பா.ஜ.க.வுக்கும் சம பொறுப்பு உள்ளது…. மாயாவதி குற்றச்சாட்டு..

புலம்பெயர்ந்தோரின் அவல நிலைக்கு காங்கிரசும், பா.ஜ.க.வுக்கும் சம பொறுப்பு உள்ளது…. மாயாவதி குற்றச்சாட்டு..

பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி கூறியதாவது: மத்திய அல்லது மாநில அரசுகள் புலம்பெயர்ந்தோர் மீது கவனம் செலுத்தவில்லை. தங்களது நிறுவனங்கள் சம்பளம் தராதது மற்றும் பசியால் இறக்க தொடங்கும்போது, வேறுவழியில்லாததால் விரக்தியில் தங்களது சொந்த மாநிலங்களை நோக்கி புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் செல்ல தொடங்கினர்.

புலம்பெயர்ந்தோரின் அவல நிலைக்கு காங்கிரசும், பா.ஜ.க.வுக்கும் சம பொறுப்பு உள்ளது…. மாயாவதி குற்றச்சாட்டு..

பா.ஜ.க.வும், காங்கிரசும் இந்த விவகாரத்தில் ஒருவரை ஒருவர் குற்றம் சாட்டுகின்றனர். இருப்பினும் லாக்டவுன் மத்தியில் புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் அவலநிலைக்கு அந்த இரண்டு கட்சிகளுக்கும் சமமான பொறுப்பு உள்ளது. சுதந்திரத்திற்கு பிறகு காங்கிரஸ் நீண்ட காலம் மத்தியிலும், பெரும்பான்மையான மாநிலங்களிலும் ஆட்சியில் இருந்தது. அப்போது அருகிலுள்ள இடங்களில் வேலை வாய்ப்புகள் இல்லாத போது மக்கள் பிற மாநிலங்கள் மற்றும் நகரங்களுக்கு செல்ல தொடங்கினர். பலவீனமான பிரிவின் நிலை மிகவும் மோசமாக இருந்தது. அவர்களின் தலைவர்கள் மீது கூட வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.

புலம்பெயர்ந்தோரின் அவல நிலைக்கு காங்கிரசும், பா.ஜ.க.வுக்கும் சம பொறுப்பு உள்ளது…. மாயாவதி குற்றச்சாட்டு..

எஸ்.சி./எஸ்.டி. சட்டத்தை அமல்படுத்துவதற்கு எதிராக காங்கிரஸ் நின்றது. அதனால்தான் ஜவஹர்லால் நேருவின் அமைச்சரவையிலிருந்து டாக்டர் பி.ஆர். அம்பேத்கர் ராஜினாமா செய்தார். பா.ஜ.க.வுடன் நாங்கள் சேரப்போவதாக காங்கிரஸ் கூறுகிறது. அதனை நாங்கள் கணடிக்கிறோம். நாங்கள் எந்தவொரு தேர்தலிலும் காங்கிரஸ் அல்லது பா.ஜ.க.வுடன் கூட்டணி வைக்கமாட்டோம் என்பதை தெளிவுப்படுத்துகிறோம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.