நல்ல உடல் நலத்துடன் நாட்டிற்கு தொடர்ந்து சேவை ஆற்றுங்கள் : மோடிக்கு ஸ்டாலின் வாழ்த்து !

 

நல்ல உடல் நலத்துடன் நாட்டிற்கு தொடர்ந்து சேவை ஆற்றுங்கள் : மோடிக்கு ஸ்டாலின் வாழ்த்து !

பிரதமர் மோடியின் பிறந்தநாளையொட்டி திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

நல்ல உடல் நலத்துடன் நாட்டிற்கு தொடர்ந்து சேவை ஆற்றுங்கள் : மோடிக்கு ஸ்டாலின் வாழ்த்து !

பிரதமர் நரேந்திர மோடி இன்று தனது 70 ஆவது பிறந்த நாளைக் கொண்டாடுகிறார். இதனால் நாடு முழுவதும் மோடியின் பிறந்தநாள் பாஜகவினரால் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. பாஜக தொண்டன், குஜராத் முதல்வர், நாட்டின் பிரதமர் என மாபெரும் வளர்ச்சியை நோக்கி பயணித்து வரும் பிரதமர் நரேந்திர மோடிக்கு அரசியல் கட்சி தலைவர்களும், திரைப்பிரபலங்களும் வாழ்த்து கூறி வருகின்றனர்.

இந்நிலையில் பிரதமரின் பிறந்த நாளுக்கு திமுக தலைவர் முக ஸ்டாலின் வாழ்த்து கூறியுள்ளார். அதில், “மாண்புமிகு பிரதமர் மோடிக்கு பிறந்தநாள் வாழ்த்துகள். நல்ல ஆரோக்கியத்துடன் நீண்ட ஆயுளுடனும் இருந்து தேசத்திற்கான உங்கள் சேவையைத் தொடரட்டும்” என்று பதிவிட்டுள்ளார்.