• April
    02
    Thursday

Main Area

Main



அயோத்தி தீர்ப்பை யாருடைய வெற்றியாகவும், தோல்வியாகவும் பார்க்க‌க்கூடாது: மோடி வேண்டுகோள்!

மோடி
மோடி

70 ஆண்டுகளாக நடந்து வந்த அயோத்தி விவகாரம் ஒருவழியாக இன்று முடிவுக்கு வந்துள்ளது. அயோத்தியில் சர்ச்சைக்குரிய நிலமாக கருதப்பட்ட   2.77 ஏக்கர் நிலம்  இந்துக்களுக்கே சொந்தம் என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

ayodha

மேலும் அங்கு  ராமர் கோயில் கட்ட அனுமதி அளித்துள்ள உச்ச நீதிமன்றம் இஸ்லாமியர்களுக்கு 5 ஏக்கரில் மாற்று இடம் வழங்க வேண்டும் என்றும் தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளது. 

modi

இந்நிலையில் இதுகுறித்து பிரதமர் மோடி தனது டிவிட்டர் பக்கத்தில், 'அனைத்து தரப்பும் ஏற்கும் வகையிலான தீர்ப்பை உச்சநீதிமன்றம் அளித்துள்ளதாக நினைக்கிறேன். அயோத்தி தீர்ப்பை யாருடைய வெற்றியாகவும், தோல்வியாகவும் பார்க்க‌க்கூடாது.

 

நாட்டு மக்கள் அனைவரும் ஒற்றுமையுடன் அமைதியை உறுதிப்படுத்த வேண்டும்' என்று பதிவிட்டுள்ளார். 


 

2018 TopTamilNews. All rights reserved.