3ஆவது கட்ட ஊரடங்கு தளர்வு! 25% பார்வையாளர்களுடன் தியேட்டர்களை திறக்க அனுமதி

 

3ஆவது கட்ட ஊரடங்கு தளர்வு! 25% பார்வையாளர்களுடன் தியேட்டர்களை திறக்க அனுமதி

கொரோனா நோய்த் தொற்று உலக மக்களை வாட்டி எடுத்துவருகிறது. மார்ச் மாதம் முதல் இந்தியாவில் நோய்த் தொற்று பரவுவத் தொடங்கியது. அதனால், அம்மாத இறுதியில் ஊரடங்கு அறிவிக்கப்பட்டது. இதனால் நாடு முழுக்க அனைத்து வகை வணிக வளாகங்கள், பள்ளி, கல்லூரிகள், சினிமா தியேட்டர்கள் உள்ளிட்ட அனைத்தும் மூடப்பட்டன. 4 மாதங்களாக சினிமா தியேட்டர்கள் திறக்கப்படாததால் அதனை ஒட்டிய ஏராளமான தொழில்கள் முடங்கின.

3ஆவது கட்ட ஊரடங்கு தளர்வு! 25% பார்வையாளர்களுடன் தியேட்டர்களை திறக்க அனுமதி

இந்நிலையில் 3 ஆவது ஊரடங்கு தளர்வின் ஒரு பகுதியாக ஆகஸ்ட் ஒன்றாம் தேதி முதல் திரையரங்குகளை திறக்க அனுமதிக்கலாம் என்று, மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்பு துறை அமைச்சகம் உள்துறை அமைச்சருக்கு பரிந்துரையை அனுப்பி உள்ளது. திரையரங்கு உரிமையாளர்கள் 50 சதவீத இருக்கைகளுடன் திரையரங்குகளை திறக்க அனுமதிக்க வேண்டும் என கூறி வருகின்றனர். இந்த நிலையில் 25 சதவீத இருக்கைகளுடன் திரையரங்குகளை திறக்க அனுமதிக்கலாம் என பரிந்துரை வழங்கப்பட்டுள்ளது. தகவல் மற்றும் ஒளிபரப்பு துறை அமைச்சகத்தின் இந்த பரிந்துரை உள்துறை அமைச்சகத்தின் பரிசீலனையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.