மேக்ஸ்வெல் டீமின் கேப்டன் விராட் கோலி இல்லையாம்… அப்ப கேப்டன் யாரு?

 

மேக்ஸ்வெல் டீமின் கேப்டன் விராட் கோலி இல்லையாம்… அப்ப கேப்டன் யாரு?

ஐபிஎல் 2020 போட்டிகள் நடக்குமா… நடக்காதா என்ற பெரிய குழப்பத்திற்கு விடை கிடைத்தது. அடுத்த மாதம் செப்டம்பர் 19-ம் தேதி ஐக்கிய அமீரகத்தில் ஐபில் 2020 போட்டிகள் கோலாகலமாகத் தொடங்குகின்றன.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர்கள் தோனி, ரெய்னா உள்ளிட்டோர் சென்னையில் ஐந்து நாட்கள் பயிற்சி எடுத்தனர். இன்றைக்கு ஐக்கிய அமீரகத்திற்கு புறப்பட்டே சென்றுவிட்டனர்.

மேக்ஸ்வெல் டீமின் கேப்டன் விராட் கோலி இல்லையாம்… அப்ப கேப்டன் யாரு?

மும்பை, ராஜஸ்தான் உள்ளிட்ட அணிகள் நேற்றே ஐக்கிய அமீரகத்திற்குச் சென்று விட்டன.

ஐபிஎல் போட்டிகளைப் பார்க்க ரசிகர்களை மைதானத்திற்கு அனுமதிப்பது தொடர்பாகவும் தீவிரமாக ஆய்வு நடத்தி வருகின்றன.

ரசிகர்களும் தங்கள் மாநில அணிகளுக்காக அல்லது தங்களுக்கு பிடித்த வீரர் இருக்கும் அணிக்கு ஆதரவு கொடுக்கும் மனநிலைக்கு உற்சாகமாகத் தயாராகிவிட்டனர்.

மேக்ஸ்வெல் டீமின் கேப்டன் விராட் கோலி இல்லையாம்… அப்ப கேப்டன் யாரு?

இந்நிலையில் ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் ஆல்ரவுண்டர் மேக்ஸ்வேல் ஒரு கனவு ஐபிஎல் டீமை உருவாக்கியிருக்கிறார். அதற்கான வீரர்களின் பட்டியலையும் வெளியிட்டிருக்கிறார். அதில் சில ரசிகர்கள் ஹேப்பி… சிலர் அப்செட். அப்படியென்ன பட்டியலைக் கொடுத்திருக்கிறார். வாங்க பார்ப்போம்.

விராட் கோலி,
வார்னர்,
டி வில்லியர்ஸ்,
சுரேஷ் ரெய்னா,
மேக்ஸ்வெல்,
ரசல்,
மஹேந்திர சிங் தோனி,
ஹர்பஜன் சிங்,
ஜஸ்பிரித் பும்ரா,
புவனேஷ்வர் குமார்,
மோஹித் ஷர்மா.

மேக்ஸ்வெல் கனவு அணியின் கேப்டன் யார் மஹேந்திர சிங் தோனி என்பதில் பலருக்கு ஆச்சர்யமில்லைதான். ஆனால், அவர் ஓய்வு அறிவித்திருக்கும் இந்த சூழ்நிலையில் அவர் பெயரைப் பார்த்ததும் பலருக்கும் மகிழ்ச்சி கலந்த சர்ப்பரைஸ்.

மேக்ஸ்வெல் டீமின் கேப்டன் விராட் கோலி இல்லையாம்… அப்ப கேப்டன் யாரு?

விராட் கோலி ரசிகர்களுக்கு இந்திய அணிக்கே கேப்டனாக வழிநடத்தும் கோலியை இந்த டீமின் கேப்டனாக்காததில் கொஞ்சம் வருத்தம்.

ஆனால், அதிரடியாக அடித்து ஆடும் தொடக்க வீரராக வார்னருடன் சேர்ந்து விராட் கோலியைத்தான் மேக்ஸ்வெல் தேர்வு செய்திருக்கிறார். வார்னரின் சற்று நிதானமும் கோலியின் அதிரடியும்  என  ஓப்பனிங்குக்கு மிகச் சரியான தேர்வு.

ஆனால், ரோஹித் ஷர்மா பெயர் பேட்டிங்கிலும் அஸ்வின் ரவிச்சந்திரன் பெயர் பவுலிங்லும் இல்லாதது ஆச்சர்யமே.

மேக்ஸ்வெல் டீமின் கேப்டன் விராட் கோலி இல்லையாம்… அப்ப கேப்டன் யாரு?

ஒன் டவுன் டிவில்லியர்ஸ், மிடில் ஆர்டரில் ரெய்னா, மேக்ஸ்வெல், ரசல், தோனி எனப் பட்டியல் அட்டாகசம்.

பும்ரா, ஹர்பஜன், புவனேஷ் குமார், மோஹித் குமார் என பவுலிங் கலவையும் பெட்டர்தான். ஆனால், சுழற்பந்துக்கு இன்னொருவரை தேர்வு செய்திருக்கலாம்.

அவரை சேர்த்திருக்கலாம், இவரைச் சேர்த்திருக்கலாம் எனச் சொல்லிக்கொண்டே இருக்கலாம். ஆனாலும் மேக்ஸ்வெலின் ட்ரீம் டீம் எந்த டீமை வெல்லக்கூடிய அசத்தல் டீம்.