இந்தியில் ரீமேக்காகும் விஜய்யின் மாஸ்டர் ! ரீமேக் உரிமையைக் கைப்பற்றியது யார் தெரியுமா?

 

இந்தியில் ரீமேக்காகும் விஜய்யின் மாஸ்டர் ! ரீமேக் உரிமையைக் கைப்பற்றியது யார் தெரியுமா?

தமிழில் வசூல் சாதனைப் படைத்த மாஸ்டர் இந்தியில் உருவாகுகிறது.

பெரிதும் எதிர்பார்க்கப்பட்டு தளபதி விஜய் மற்றும் விஜய்சேதுபதி நடித்து ஜனவரி 13-ஆம் தேதி வெளியான மாஸ்டர் படம் இரண்டே நாட்களில் பாக்ஸ் ஆபீஸில் வசூல் சாதனையைப் படைத்தது. இப்படத்தை இந்தியில் ரீமேக் செய்யும் உரிமையைப் கைப்பற்றியிருக்கிறது எண்டமோல் ஷைன் இந்தியா, சினி 1 ஸ்டூடியோஸ் மற்றும் செவன் ஸ்கிரீன் நிறுவனங்கள்.

பரபரப்பான ஆக்‌ஷன் த்ரில்லர் திரைப்படமான மாஸ்டருக்காக ஹீரோவான விஜய்க்கு வில்லனாக விஜய்சேதுபதி திரையில் நடித்திருக்கிறார். லோகேஷ் கனகராஜ் இயக்கியிருக்கும் இப்படத்தில் விஜய், விஜய்சேதுபதி இருவருக்குமான சண்டைக் காட்சிகள் அதகளமாக அமைந்திருக்கிறது. படத்திற்கான பின்னணி இசை மற்றும் பாடல்களை அனிருத் இசையமைத்திருக்கிறார். கல்லூரி பேராசிரியரான விஜய், சிறுவர் சீர்திருத்தப் பள்ளியில் நடக்கும் அக்கிரமங்களுக்கு காரணமான வில்லன் விஜய்சேதுபதியுடன் மோதி சிறார்களை மீட்பதே ஒன்லைன். எண்டெமோல் ஷைன் இந்தியா, சினி 1 ஸ்டுடியோஸ் மற்றும் 7 ஸ்கிரீன் நிறுவனங்கள் இணைந்து விரைவில் மாஸ்டரின் இந்தி ரீமேக்கிற்கான நடிகர்களை தேர்ந்தெடுக்கும் பணிகளை துவங்க இருக்கிறார்கள்.

இந்தியில் ரீமேக்காகும் விஜய்யின் மாஸ்டர் ! ரீமேக் உரிமையைக் கைப்பற்றியது யார் தெரியுமா?

எண்டமோல் ஷைன் இந்தியா நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி அபிஷேக் ரீஜ் பேசுகையில், “ மாஸ்டர் திரைப்படமானது சிறந்த திரைப்படம், அட்டகாசமான நடிப்பு மற்றும் பவர்ஃபுல்லான திரைக்கதை என ரசிகர்களை கவர்ந்து இழுத்துவிட்டது. மேலும், கொரோனா அச்சுறுத்தலின் போதும் கூட, பாக்ஸ் ஆபீஸில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியது நினைக்கூறத்தக்கதாக இருக்கும். மாஸ்டரின் இந்தி ரீமேக்கை கைப்பற்றியது எங்களுக்கு நம்பமுடியாத பெருமையை தருகிறது. இந்தி ஆடியன்ஸ்களுக்கு ஏற்றமாதிரி இந்தப் படத்தை மீண்டும் உருவாக்க இருக்கிறோம்” எனக் கூறினார்

இதுகுறித்து சினி 1 ஸ்டுடியோவின் முராத் கெதானி கூறும்போது, “ மாஸ்டர் ஒரு பிரம்மாண்ட படைப்பு. இது வெளியான ஒரு நாளுக்குள் ஏற்கனவே நாட்டில் தனது இடத்தை நிலைநிறுத்தியுள்ளது மற்றும் பார்வையாளர்களிடமிருந்து பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. சினி 1 இல்,சிறந்த படைப்புகளை கொண்ட சினிமாவை ஆதரிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளோம். அதன்படி, மீண்டும், இந்தி மொழியில் இந்த படத்தை பார்வையாளர்களுக்கு வழங்குவதில் பெருமிதம் கொள்கிறோம்! ” எனக் கூறினார்.

இந்தியில் ரீமேக்காகும் விஜய்யின் மாஸ்டர் ! ரீமேக் உரிமையைக் கைப்பற்றியது யார் தெரியுமா?

மாஸ்டர் படத்தின் இணைத் தயாரிப்பாளரான செவன் ஸ்கிரீன் எஸ்.எஸ்.லலித்குமார் பேசும்போது, “ திரையுலகிற்கான ஒட்டுமொத்த வெற்றியாக திகழ்கிறது மாஸ்டர். ஒரு நல்ல கதையும், சிறந்த நடிகரும் எப்போதும் ரசிகர்களுடன் எளிதில் இணைந்துவிடுகிறார்கள். மாஸ்டர் முழு டீமுக்கும் என்னுடைய வாழ்த்துகள். இந்தி ரீமேக்கில் எண்டமோல் ஷைன் இந்தியா மற்றும் சினி 1 நிறுவனத்துடன் கைகோர்ப்பதில் பெரும் மகிழ்ச்சியடைகிறேன். அதோடு, மீண்டும் மிகப்பெரிய வெற்றியைப் பெறும் என்பதை நம்புகிறேன்” என்று கூறினார்.