மாஸ்டர் தியேட்டரில்தான் ரிலீஸ்- மாஸ்டர் தயாரிப்பு நிறுவனத்தின் அறிக்கை

 

மாஸ்டர் தியேட்டரில்தான் ரிலீஸ்- மாஸ்டர் தயாரிப்பு நிறுவனத்தின் அறிக்கை

லோகேஷ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள படம் மாஸ்டர்.சேவியர் பிரிட்டோ தயாரித்துள்ள இந்த படத்தின் ஒட்ட்மொட்த உரிமையையும் லலித் கைப்பற்றியுள்ளார். கொரோனா பரவல் காரணமாக மாஸ்டர் திரைப்படம் திரையரங்கில் வெளியாவது தள்ளிக்கொண்டே சென்றது. தற்போது திரையரங்குகள் திறக்கப்பட்ட நிலையில் படம் எப்போது ரிலீஸாகும் என ரசிகர்கள் எதிர்பார்த்து காத்துக்கொண்டிருக்கின்றனர். இதனிடையெ நெட்பிளிக்ஸ்க்கு மாஸ்டர் திரைப்படம் விற்கப்பட்டது. தியேட்டரில் ரிலீஸ் செய்வதா அல்லது நேரடியாக ஓடிடியில் ரிலீஸ் செய்வதா என இன்னும் முடிவு செய்யவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

மாஸ்டர் தியேட்டரில்தான் ரிலீஸ்- மாஸ்டர் தயாரிப்பு நிறுவனத்தின் அறிக்கை

இந்நிலையில் மாஸ்டர் திரைப்படத்தை திரையரங்குகளில் வெளியிடவே விரும்புகிறோம் என்றும், ரசிகர்கள் எதிர்பார்க்கும் அந்த மிகப்பெரிய நான் விரைவில் வரும் என நாங்களும் காத்திருக்கிறோம் என்றும் தயாரிப்பு நிறுவனம் அறிக்கை வாயிலாக தெரிவித்துள்ளது. ஓடிடி தளத்தில் இருந்து எங்களை அணுகியபோதும் திரையரங்கில் வெளியிடவே நாங்கள் விரும்புகிறோம் என பதிலளித்ததாக மாஸ்டர் திரைப்படத்தின் தயாரிப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது.