மாஸ்டர் மாஷ் அப் வரும் 12 ஆம் தேதி மாலை 6 மணிக்கு வெளியீடு!

 

மாஸ்டர் மாஷ் அப் வரும் 12 ஆம் தேதி மாலை 6 மணிக்கு வெளியீடு!

பிகில் திரைப்படத்தைத் தொடர்ந்து விஜய் நடிக்கும் மாஸ்டர் படத்தை இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கி வருகிறார். த்ரில்லர் பாணியில்  உருவாகும் இந்தப் படத்தில் விஜய் சேதுபதி வில்லனாக நடிக்கிறார். மேலும் நடிகர் சாந்தனு, நடிகை மாளவிகா மோகனன், ஆண்டனி வர்கீஸ். விஜே ரம்யா,கௌரி கிஷன்  உள்ளிட்ட பலர்  நடிக்கின்றனர். இப்படத்தின் படப்பிடிப்பு டெல்லி, கர்நாடகா, சென்னை, நெய்வேலியில் நடைபெற்றது.  மாஸ்டர் படத்தின் இசை வெளியீட்டு விழா கடந்த மாதம் 15 ஆம் தேதி பேலஸ் ஹோட்டலில் நடைபெற்றுவருகிறது. மாஸ்டர் படம் ஏப்ரல் 9 ஆம் தேதி ரீலிசாகும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் கொரோனா வைரஸ் ஊரடங்கால் பட ரிலீஸ் தள்ளிப்போகியுள்ளது. பல தொழில் துறைகளுக்கு தளர்வுகள் அளிக்கப்பட்டு வரும் நிலையில், தியேட்டர்களும் வரும் ஜூலை மாதம் திறக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

இந்நிலையில் விஜயின் பிறந்த நாளான ஜூன் 22 ஆம் தேதி விஜய் பிறந்த நாளில் மாஸ்டர் படத்தில் இருந்து போஸ்டர், டீசர், டிரெய்லர் என ஏதாவது ஒன்று வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையில் மாஷ் அப் வீடியோ வரும் 12 ஆம் தேதி மாலை 6 மணிக்கு வெளியிடப்படும் என்றும் அடுத்த அறிவிப்பு வரும் புதன் கிழமை எதிர்பார்க்கலாம் என்றும் ஏ2 ஸ்டூடியோ ட்வீட் செய்துள்ளது.