விஜய் பிறந்த நாள்…. வைரலாகும் ‘மாஸ்டர்’ படத்தின் ‘கொளுத்துங்கடா’ போஸ்டர்! #HBDTHALAPATHYVijay

 

விஜய் பிறந்த நாள்…. வைரலாகும் ‘மாஸ்டர்’ படத்தின் ‘கொளுத்துங்கடா’ போஸ்டர்! #HBDTHALAPATHYVijay

விதவிதமான போஸ்டர் ஒட்டுவது வரை கலக்கிவருகிறார்கள். நேற்று மதியம் முதலே ட்விட்டரின் விஜயின் பிறந்த நாள் வாழ்த்துகள் கூறி ட்ரெண்டில் இடம்பிடித்துவருகின்றனர் ரசிகர்கள். #HBDTHALAPATHYVijay எனும் ஹேஷ்டேக் ஏழு மணிநேரத்துக்கும் அதிகமாக இந்திய அளவிலான ட்விட்டர் ட்ரெண்டில் இடம்பிடித்துவிட்டது.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்துவரும் படம் ‘மாஸ்டர்’. இதில் விஜயுடன் விஜய் சேதுபதியும் இணைந்து நடிக்கிறார் என்பது சினிமா ரசிகர்களின் எதிர்பார்ப்பை இன்னும் அதிகமாக்கி விட்டது. லாக்டெளனுக்கு முன் இப்படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா மிகப் பிரமாண்டமாக நடந்தது. அந்த விழாவில் டான்ஸ் ஆடி ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சியை அளித்தார்.

https://twitter.com/MasterTeamOffi/status/1274771705269899264/photo/1 விஜய் பிறந்த நாள்…. வைரலாகும் ‘மாஸ்டர்’ படத்தின் ‘கொளுத்துங்கடா’ போஸ்டர்! #HBDTHALAPATHYVijay

இன்று நடிகர் விஜயின் பிறந்த நாள் ஸ்பெஷலாக ‘மாஸ்டர்’ படத்தின் போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது. இதற்காகவே காத்திருந்த அவரின் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

ரசிகர்கள் மட்டுமன்றி திரைக்கலைஞர்கள் பலரும் வாழ்த்துகளைத் தெரிவித்துவருகின்றனர். நடிகை நயன்தாரா மாஸ்டர் பட புது போஸ்டரை ட்விட்டரின் பகிர்ந்து நடிகர் விஜய்க்கு பிறந்த நாள் வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.