மாஸ்டர் படத்தை இணையதளங்களில் வெளியிட தடை!

 

மாஸ்டர் படத்தை இணையதளங்களில் வெளியிட தடை!

மாஸ்டர் படத்தை இணையதளங்களில் வெளியிட சென்னை உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது.

இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்துள்ள திரைப்படம் மாஸ்டர். இப்படத்தில் நடிகர் விஜய் சேதுபதி, மாளவிகா மோகனன், சாந்தனு உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். படவேலைகள் முடிந்து ஏப்ரல் மாதம் இப்படம் வெளியாக இருந்த நிலையில் கொரோனா காரணாமாக படத்தின் ரிலீஸ் தள்ளிப்போனது. கொரோனா பேரிடர் காலத்தில் பல திரைப்படங்கள் ஓடிடி தளத்தில் வெளியான நிலையில் தியேட்டரில் தான் மாஸ்டர் வெளியாகும் என படக்குழு உறுதியாக காத்திருந்தது.

மாஸ்டர் படத்தை இணையதளங்களில் வெளியிட தடை!

இதனிடையே திரைத்துறையினர் மற்றும் மாஸ்டர் படக்குழு 100% இருக்கைகளுடன் தியேட்டர்கள் செயல்படலாம் என்று தமிழக அரசு அறிவிக்க கோரிக்கை விடுத்த நிலையில், தமிழக அரசு அதற்கான அனுமதியை அளித்துள்ளது. இதற்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

மாஸ்டர் படத்தை இணையதளங்களில் வெளியிட தடை!

இந்நிலையில் மாஸ்டர் படத்தை இணையதளங்களில் வெளியிட உயர் நீதிமன்றம் தடை விதித்துள்ளது. மாஸ்டர் திரைப்படம் இணையத்தில் வெளியானால், பெருத்த நஷ்டம் ஏற்படும் என செவன் ஸ்க்ரீன் ஸ்டூடியோ நிறுவனம் மனுதாக்கல் செய்த நிலையில், சட்டவிரோதமாக 400 இணையதளங்கள், 9 கேபிள் டிவிக்களில் படத்தை வெளியிட நீதிபதி தடைவிதித்து உத்தரவிட்டுள்ளார்.