அசாம் டின்சுகியா மாவட்டத்தின் எண்ணெய் கிணற்றில் பயங்கர தீ விபத்து

 

அசாம் டின்சுகியா மாவட்டத்தின் எண்ணெய் கிணற்றில் பயங்கர தீ விபத்து

கவுகாத்தி: அசாம் டின்சுகியா மாவட்டத்தின் எண்ணெய் கிணற்றில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.

அசாமின் டின்சுகியா மாவட்டத்தில் ஆயில் இந்தியா லிமிடெட் (ஓஐஎல்) எண்ணெய் ஆய்வு நிறுவனத்துக்கு சொந்தமான எண்ணெய் கிணற்றில் இயற்கை வாயுவை கட்டுப்பாடற்ற முறையில் வெளியேற்றும் இடத்தில் வெடித்து தீ விபத்து ஏற்பட்டது. இன்று மதியம் 1:30 மணியளவில் இந்த வெடிப்பு நிகழ்ந்ததை அடுத்து எண்ணெய் கிணறு எண் 5-இல் புகை மற்றும் தீப்பிழம்புகள் வானத்தை சூழ்ந்தன.

இந்த வெடிப்பு சம்பவத்தால் நிகழ்ந்த சேதம் குறித்து உடனடியாகத் தகவல் தெரியவில்லை. யாரேனும் ஊழியர்கள் இந்த வெடிப்பு சம்பவத்தின்போது அந்த இடத்தில் இருந்தார்களா என்பதும் தெரியவில்லை. எண்ணெய் கிணறுகளில் இது போன்ற ஒரு சம்பவம் நடப்பது மிகவும் அரிதானது.

கடந்த 2005-ஆம் ஆண்டில் திப்ருகார் மாவட்டத்தில் டிகோமில் இதேபோன்ற வெடிப்பு சம்பவத்தின்போது, ​​கைவிடப்பட்ட எண்ணெய் கிணற்றில் ஏற்பட்ட தீப்பிழம்பைக் கட்டுப்படுத்த வெளிநாட்டிலிருந்து நிபுணர்கள் வர வேண்டியிருந்தது. அங்கு 45 நாட்களுக்குப் பிறகு தான் நிலைமையைக் கட்டுக்குள் கொண்டு வர முடிந்தது.