கர்நாடகா: ஒரே குழியில் கொரோனாவால் இறந்தவர்கள் உடல்களைத் தூக்கி வீசிய ஊழியர்கள்! – அதிர்ச்சி வீடியோ

 

கர்நாடகா: ஒரே குழியில் கொரோனாவால் இறந்தவர்கள் உடல்களைத் தூக்கி வீசிய ஊழியர்கள்! – அதிர்ச்சி வீடியோ

கர்நாடகாவில் கொரோனா பாதிப்பு காரணமாக உயிரிழந்தவர்கள் உடல்களை ஒரே குழிக்குள் தூக்கி வீசி எறிந்து அடக்கம் செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மனிதாபிமானத்தோடு அடக்கம் செய்ய அம்மாநில முதல்வர் அறிவுரை வழங்கியுள்ளார்.
சில வாரங்களுக்கு முன்பு கொல்கத்தாவில் மருத்துவமனையிலிருந்து வாகனம் ஒன்றில் கொரோனா பாதிக்கப்பட்டவர்கள் உடல் ஏற்றப்பட்ட விதம் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்த நிலையில் கர்நாட மாநிலம் பெல்லாரி மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு காரணமாக உயிரிழந்தவர்கள் உடலை குழிக்குள் தூக்கி எறிந்த சம்பவத்தின் வீடியோ அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடகா: ஒரே குழியில் கொரோனாவால் இறந்தவர்கள் உடல்களைத் தூக்கி வீசிய ஊழியர்கள்! – அதிர்ச்சி வீடியோகொரோனா பாதிப்பு காரணமாக உயிரிழந்தவர்கள் உடலை உறவினர்களிடம் வழங்குவது இல்லை. அனைத்து பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்றி அரசே அடக்கம் செய்கிறது. அப்படி அடக்கம் செய்ய உடலை எடுத்துச் செல்லும் ஊழியர்கள், உடல்களைத் தூக்கி வீசுவதும், தரையில் தரதரவென இழுத்துச் செல்வதுமாக தொடர்ந்து அத்துமீறலில் ஈடுபட்டு வருகின்றனர். உயிரிழந்தவர்கள்தானே என்ற அலட்சியம் காரணமாக உடல்களை தூக்கி வீசுதுவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஒரே குழிக்குள் பலரது உடல்களை மிகவும் அலட்சியமாக இழுத்துவந்து வீசியது நாடு முழுக்க அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடகா: ஒரே குழியில் கொரோனாவால் இறந்தவர்கள் உடல்களைத் தூக்கி வீசிய ஊழியர்கள்! – அதிர்ச்சி வீடியோஇது குறித்து பெல்லாரி மாவட்ட நிர்வாகம் தரப்பில் கூறுகையில், “இந்த வீடியோ கொரோனா காரணமாக உயிரிழந்தவர்கள் அடக்கம் செய்யப்படும் போது எடுக்கப்பட்டது என்று தெளிவாக தெரிகிறது. நடந்த சம்பவத்துக்காக உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரிடம் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்டுக்கொள்கிறோம். இந்த பணியில் ஈடுபட்டுள்ளவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். இனி இவர்கள் உடல் அடக்கம் செய்யும் பணியில் ஈடுபடுத்தப்பட மாட்டார்கள். உடல்களை அடக்கம் செய்ய தகுந்த நபர்களை நியமிக்க உத்தரவிடப்பட்டுள்ளது” என்று கூறியுள்ளது.

மாநில முதல்வர் எடியூரப்பா இது குறித்து கூறுகையில், “பெல்லாரியில் கொரோனா பாதிப்பு காரணமாக உயிரிழந்தவர்கள் உடலை அடக்கம் செய்த விதம் மனிதத் தன்மையற்றது, வலியை ஏற்படுத்தக்கூடியதாக உள்ளது. மனிதத்தன்மையைத் தாண்டிய மதம் இல்லை என்பதை ஊழியர்கள் புரிந்துகொள்ள வேண்டும்” என்று கூறியுள்ளார்.