• April
    05
    Sunday

Main Area

Main



மும்பை தாக்குதல் தீவிரவாதி மசூத் அசார் மற்றும் அவனது குடும்பம் திடீர் மாயம் - பாகிஸ்தான் தகவல்

Masood Azhar
Masood Azhar

டெல்லி: மும்பை தாக்குதல் பயங்கரவாதி மசூத் அசாரும், அவனது குடும்பமும் திடீர் மாயமானதாக பாகிஸ்தான் தகவல் கூறியுள்ளது.

கடந்த 2008-ஆம் ஆண்டு மும்பையில் நடந்த தீவிரவாத தாக்குதலுக்கு ஜெய்ஷ்-இ-முகமது தீவிரவாத இயக்க தலைவர் மசூத் அசார் மூளையாக செயல்பட்டான். பாகிஸ்தானில் பதுங்கி உள்ள இவனது  இயக்கம் தான் கடந்தாண்டு புல்வாமா தாக்குதலையும் நடத்தியது. இதில் 40 பாதுகாப்பு படை வீரர்கள் பரிதாபமாக பலியானார்கள். மசூத் அசாரை சர்வதேச தீவிரவாதியாக ஐ.நா.பாதுகாப்பு கவுன்சில் கடந்த ஆண்டு மே மாதம் அறிவித்தது.

ttn

இந்த நிலையில், சர்வதேச தீவிரவாத நிதி தடுப்பு அமைப்பின் சார்பில் கடந்த அக்டோபர் மாதம் நடந்த கூட்டத்தில் பங்கேற்ற பாகிஸ்தான் மசூத் அசாரையும், அவரது குடும்பத்தினரையும் காணவில்லை என்று தெரிவித்துள்ளதாக தற்போது தகவல் வெளியாகியுள்ளது. தீவிரவாத தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளாத பாகிஸ்தானை சமீபத்தில் கருப்பு பட்டியலில் சேர்த்து சர்வதேச பயங்கர நிதி தடுப்பு அமைப்பு நடவடிக்கை எடுத்து இருந்தது குறிப்பிடத்தக்கது.

2018 TopTamilNews. All rights reserved.