சொர்க்கவாசல் திறப்பு : மாஸ்க் கட்டாயம்!

 

சொர்க்கவாசல் திறப்பு : மாஸ்க் கட்டாயம்!

ஆண்டாள் கோவிலில் சொர்க்கவாசல் திறப்பு பார்க்க பக்தர்களுக்கு மாஸ்க் கட்டாயம் என்று கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

சொர்க்கவாசல் திறப்பு : மாஸ்க் கட்டாயம்!

வைகுண்ட ஏகாதசி பெருவிழா பெருமாள் கோயில்களில் விஷேஷமாக பார்க்கப்படும் நாளாகும். அதிகாலையில் சொர்க்கவாசல் திறக்கப்பட்டு அன்றைய நாள், பக்தர்கள் சொர்க்கவாசல் வழியாக சென்று பெருமாளை தரிசிப்பது ஐதீகம்.  அதேபோல் அன்றைய நாள் மரணமடைவோர் சொர்க்க லோகத்தில் இறைவனடியை சேருவர் என்றும் புராணங்களில் கூறப்பட்டுள்ளது. இருப்பினும் இந்தாண்டு கொரோனா காரணமாக வைகுண்ட ஏகாதசி விழாக்களில் பக்தர்கள் கலந்துகொள்ள பல கோயில்களில் அனுமதி மறுக்கப்பட்டு உள்ளது.

சொர்க்கவாசல் திறப்பு : மாஸ்க் கட்டாயம்!

இந்நிலையில் ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் சொர்க்கவாசல் திறப்பு பார்க்க பக்தர்கள் கட்டாயம் மாஸ்க் அணிய வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. மாஸ்க் அணியாத பக்தர்கள் டிசம்பர் 25ஆம் தேதி காலை 5.30 மணிக்கு நடக்கும் சொர்க்கவாசல் திறப்பு பார்க்க அனுமதி இல்லை என்றும் கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.