“வாட்ச்மேனுக்கு மதுவை ஊற்றி ,ஏடிஎம் மெஷினை வண்டியில் ஏற்றி …”.9 லட்சம் அபேஸ் .

 

“வாட்ச்மேனுக்கு மதுவை ஊற்றி ,ஏடிஎம் மெஷினை வண்டியில் ஏற்றி …”.9 லட்சம் அபேஸ் .

வாட்ச்மேனுக்கு மது வாங்கிக்கொடுத்துவிட்டு 9 லட்ச ரூபாய் பணத்துடன் ஒரு ஏடிஎம் மெஷினை தூக்கிக்கொண்டு போன கொள்ளையர்களை போலீஸ் தேடி வருகிறது .

“வாட்ச்மேனுக்கு மதுவை ஊற்றி ,ஏடிஎம் மெஷினை வண்டியில் ஏற்றி …”.9 லட்சம் அபேஸ் .


பஞ்சாபின் சண்டிகரில் அம்பாலா பகுதியில் உள்ள ஒரு இந்தியன் வங்கியின் ஏடிஎம் மெஷினை மாஸ்க் அணிந்த சிலர் ஒரு வண்டியில் ஏற்றிக்கொண்டு போன அதிர்ச்சியான சம்பவம் நடந்துள்ளது .அந்த ஏடிஎம் மெஷினில் 9 லட்ச ரூபாய் கேஷ் இருந்துள்ளது .
புதன்கிழமை இரவு அந்த ஏடிஎம் மெஷினில் வங்கி அதிகாரிகள் 10 லட்சத்துக்கும் அதிகமான தொகையை நிரப்பிவிட்டு சென்றுள்ளாரகள் .ஆனால் அன்று நள்ளிரவில் முகமூடி அணிந்த சிலர் அங்கு ஒரு வண்டியை கொண்டு வந்து ஏடிஎம் மெஷினில் இருந்த 9 லட்ச ரூபாய் பணத்தோடு தூக்கிக்கொண்டு போய் விட்டார்கள் .மறுநாள் காலையில் பகல் டூட்டிக்கு வேலைக்கு வந்த வாட்ச்மேன் அங்கு ஏடிஎம் மெஷின் இல்லாததை கண்டு அதிர்ச்சியடைந்து வங்கி அதிகாரிகளுக்கு தகவல் சொன்னார்கள் .வங்கி அதிகாரிகள் போலீசோடு விரைந்து வந்து, அங்கிருந்த சிசிடிவி கேமெராவினை ஆராய்ந்த போது அதில் சிலர் மாஸ்க் அணிந்து கொண்டு வந்து அந்த ஏடிஎம் மெஷினை வண்டியில் ஏற்றிக்கொண்டு போகும் காட்சியை கண்டு அதிர்ந்து போனார்கள் .இரவு டூட்டியில் இருந்த பாதுகாப்பு ஊழியருக்கு மது வாங்கிக்கொடுத்துவிட்டு அவர் மட்டையானதும் இப்படி அவர்கள் கொள்ளையடித்து சென்றுள்ளனர் .போலிஸார் சிசிடிவி கேமெரா காட்சியை கொண்டு தீவிர விசாரணை செய்து குற்றவாளிகளை தேடி வருகிறார்கள்