ரேஷன் கடைகளில் இலவசமாக மாஸ்க் வழங்க ஏற்பாடு – முதல்வர் பழனிசாமியின் அதிரடி அறிவிப்பு

 

ரேஷன் கடைகளில் இலவசமாக மாஸ்க் வழங்க ஏற்பாடு – முதல்வர் பழனிசாமியின் அதிரடி அறிவிப்பு

சென்னையில் கொரோனா வைரஸ் அதிவேகமாக பரவி வருகிறது. இதனை கட்டுப்படுத்த முதல்வர் பழனிசாமி இன்று மாநகராட்சி அலுவலகத்தில் ஆலோசனை மேற்கொண்டார். அதன் பின்னர் முதல்வர் செய்தியாளர்களிடம் பேசிய முதல்வர், கொரோனா தடுக்க பல நடவடிக்கை மேற்கொண்டு வருவதாகவும் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு தவிர மற்ற அனைத்து மாவட்டங்களிலும் கொரோனா கட்டுக்குள் இருப்பதாகவும் அங்கு கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.

ரேஷன் கடைகளில் இலவசமாக மாஸ்க் வழங்க ஏற்பாடு – முதல்வர் பழனிசாமியின் அதிரடி அறிவிப்பு

தொடர்ந்து தமிழகத்தில் அதிக அளவில் கொரோனா பரிசோதனை நடைபெற்று வருவதாகவும், மண்டலவாரியாக எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்பட்டதாகவும் தெரிவித்தார். தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 56% பேர் குணமடைந்து விட்டதாகவும் இறப்பு விகிதம் 0.80 ஆக இருப்பதாகவும் தமிழகத்திற்கு இதுவரை 12.56 லட்சம் பிசிஆர் கருவிகள் வந்துள்ளதாகவும் 2.71 லட்சம் கருவிகள் பரிசோதனை மையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் கூறினார்.

பொது விநியோகத் திட்டத்தின் கீழ் சர்க்கரை, எண்ணெய், அரிசி உள்ளிட்ட பொருட்கள் வழங்கப்பட்டு வருவதாகவும் மக்களின் கோரிக்கையை ஏற்று தான் தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளதாகவும் கொரோனா விவகாரத்தில் தன்னை முன்னிலை படுத்திக் கொள்ளவில்லை என்றும் கூறினார். மேலும், வென்டிலேட்டர் பயன்படுத்த கூடிய அளவிற்கு கொரோனா தீவிரம் அடையவில்லை என்றும் ரேஷன் கடைகளில் இலவசமாக மாஸ்க் வழங்க பரிசீலனை செய்யப்பட்டு வருவதாகவும் கூறினார்.