சென்னையில் முகக்கவசம் பயன்பாடு குறைவு! பகீர் ஆய்வு

 

சென்னையில் முகக்கவசம் பயன்பாடு குறைவு! பகீர் ஆய்வு

கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் பொருட்டு இந்தியா முழுவதும் கட்டுப்பாடுகள் கடுமையாக்கப்பட்டுள்ளன. கொரோனா இரண்டாம் அலையை எதிர்த்து போராட கட்டாயமாக மாஸ்க் அணிய வேண்டும், சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகள் கடுமையாக பின்பற்றப்படுகிறது. ஆனால் பலரோ மாஸ்க் சரியாக அணிவதில்லை, மேலும் கட்டுப்பாடுகளை சரியாக பின்பற்றுவதில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துவருகிறது.

சென்னையில் முகக்கவசம் பயன்பாடு குறைவு! பகீர் ஆய்வு

கடந்த ஆண்டைவிட சென்னையில் முகக்கவசம் அணிவோரின் எண்ணிக்கை குறைந்துவிட்டது. குடிசை பகுதியில் 79% பேரும், இதர பகுதிகளில் 71% பேரும் முகக்கவசம் அணிவதில்லை என சென்னை பெருநகராட்சி நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. மற்ற மாவட்டங்களைவிட சென்னையில் கொரோனா பரவல் அதிகரித்துள்ளது. ஆனால் சென்னைவாசிகள் கொரோனாவை அசால்ட்டாக எடுத்துக்கொண்டு கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை பின்பற்றுவதில்லை.