‘மாஸ்க் போட்டா தான் பெட்ரோல்’… கிடுக்குப்பிடியால் நல்ல ரிசல்ட்!

 

‘மாஸ்க் போட்டா தான் பெட்ரோல்’… கிடுக்குப்பிடியால் நல்ல ரிசல்ட்!

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிவேகமாக பரவி கொண்டிருக்கும் நிலையில், புதிய கட்டுப்பாடுகளை விதித்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்தது. மால்கள், தியேட்டர்கள், கோவில்கள் உள்ளிட்ட பொதுமக்கள் கூடும் அனைத்து இடங்கள் அனைத்துக்கும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது. அந்த வகையில், பெட்ரோல் பங்குகளில் வாகன ஓட்டிகள் ‘மாஸ்க்’ அணிந்து வந்தால் மட்டுமே பெட்ரோல் வழங்கப்படுமென விற்பனையாளர் சங்கம் அறிவித்தது.

‘மாஸ்க் போட்டா தான் பெட்ரோல்’… கிடுக்குப்பிடியால் நல்ல ரிசல்ட்!

தமிழகம் மட்டுமல்லாமல் புதுச்சேரியிலும் இந்த அறிவிப்பு அமல்படுத்தப்பட்டது. அதன்படி இன்று காலை முதல் பெட்ரோல் பங்க் ஊழியர்கள், வாகன ஓட்டிகள் மாஸ்க் அணிந்து வருகிறார்களா என்பதை தீவிரமாக கண்காணித்தனர். மாஸ்க் அணியாமல் வந்த நபர்களுக்கு பெட்ரோல் வழங்காமல் கெடுபிடி காட்டிய ஊழியர்கள், அவர்கள் மாஸ்க் அணிந்த பின்னரே பெட்ரோல் போட்டனர். சில இடங்களில் மாஸ்க் அணியாமல் வந்த வாகன ஓட்டிகள், வந்த வழியே திருப்பி அனுப்பப்பட்டனர்.

‘மாஸ்க் போட்டா தான் பெட்ரோல்’… கிடுக்குப்பிடியால் நல்ல ரிசல்ட்!

சென்னை உட்பட பெரும்பாலான இடங்களில் இந்த உத்தரவு பின்பற்றப்படுவதால், வாகன ஓட்டிகள் மாஸ்க் அணிந்து செல்ல வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. இதனால், அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் பணியாற்றும் இளைஞர்கள் மாஸ்க் அணிந்து செல்வதை காண முடிந்தது. பொதுமக்களை மாஸ்க் அணிய வைக்க விற்பனையாளர் சங்கத்தின் இந்த முன்னெடுப்பு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.