மாசிமகம் விழா – மகாமக குளத்தில் தஞ்சை ஆட்சியர் ஆய்வு

 

மாசிமகம் விழா – மகாமக குளத்தில் தஞ்சை ஆட்சியர் ஆய்வு

தஞ்சாவூர்

கும்பகோணம் மகாமக குளத்தில் மாசிமகம் திருவிழா கொண்டாடுவது குறித்து, தஞ்சை மாவட்ட ஆட்சியர் கோவிந்தா ராவ் இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

ஆண்டுதோறும் மாசி மாதம் மகம் நட்சத்திர தினத்தன்று மாசிமகம் விழா கொண்டாடப்படுவது வழக்கம். நடப்பாண்டு வரும் பிப்ரவரி 27 ஆம் தேதி மாசிமகம் விழா கொண்டாடப்பட உள்ளது. இதனையொட்டி, தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தில் உள்ள புகழ்பெற்ற மகாமக குளத்தில் தீர்த்தவாரி நிகழ்ச்சியும், தொடர்ந்து தேரோட்டமும் நடைபெற உள்ளது.

மாசிமகம் விழா – மகாமக குளத்தில் தஞ்சை ஆட்சியர் ஆய்வு

இதனையொட்டி, மகாமக குளத்திற்கு தொடர்புடைய சிவ ஆலயங்கள் மற்றும் பெருமாள் கோயில்களில் தீவிர ஏற்படுகள் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் திருவிழா ஏற்பாடுகளை தஞ்சை மாவட்ட ஆட்சியர் கோவிந்தாராவ் இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

அப்போது, தீர்த்தவாரி நடைபெறும் மகாமக குளம், சக்கரபாணி கோயில் தேரோடும் வீதி உள்ளிட்ட இடங்களை பார்வையிட்டு, விழா ஏற்பாடுகள் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். இந்த ஆய்வின்போது மாவட்ட எஸ்.பி., வருவாய் கோட்டாட்சியர் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.