திண்டுக்கல்லில் டஃப் கொடுக்கும் மார்க்சிஸ்ட்… மல்லுக்கட்டும் அமைச்சர்!

 

திண்டுக்கல்லில் டஃப் கொடுக்கும் மார்க்சிஸ்ட்… மல்லுக்கட்டும் அமைச்சர்!

தமிழக சட்டமன்றத் தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கும் நிலையில், அரசியல் களம் அனல் பறக்கிறது. தேர்தலில் வெல்லத் துடிக்கும் திமுக, அதிமுக வேட்பாளர்கள் போட்டியிடும் இடங்களில் டஃப் கொடுக்கும் வகையில் கூட்டணிக் கட்சிகளை களமிறக்கியுள்ளது. குறிப்பாக, திமுகவின் வேட்பாளர் பட்டியல் அதிமுக அமைச்சர்களுக்கு செக் வைக்கும் விதமாகவே இருந்தது.

திண்டுக்கல்லில் டஃப் கொடுக்கும் மார்க்சிஸ்ட்… மல்லுக்கட்டும் அமைச்சர்!

இந்த நிலையில், திண்டுக்கல் தொகுதியில் அதிமுக அமைச்சர் சீனிவாசனுக்கும் திமுக கூட்டணி கட்சியான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கும் நேரடி போட்டி நிலவுகிறது. அமைச்சர் சீனிவாசனை எதிர்த்து எம்.பாண்டி போட்டியிடுகிறார். திண்டுக்கல் இடது சாரிகளின் கோட்டை. கடந்த 1967ம் ஆண்டு முதல் 2011 வரை 7 முறை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அந்த தொகுதியில் வெற்றி பெற்றிருக்கிறது.

திண்டுக்கல்லில் டஃப் கொடுக்கும் மார்க்சிஸ்ட்… மல்லுக்கட்டும் அமைச்சர்!

அந்த 7 தேர்தல்களின் போதும் மார்க்சிஸ்டை வெல்ல யாருமில்லை என்பது போலவே இருந்தது. அக்கட்சியின் மூத்த தலைவர்கள் வென்ற தொகுதி. இப்படியிருக்கும் சூழலில், அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் அந்த தொகுதியில் மீண்டும் களமிறங்கியுள்ளார். சீனிவாசனை சர்ச்சை சீனிவாசன் என எதிர்க்கட்சிகள் விமர்சிப்பதுண்டு.

அண்மையில் இவர் தலித் சிறுவனை அழைத்து செருப்பை கழற்ற சொன்னது பெரும் விமர்சனத்துக்குள்ளானது. திண்டுக்கல்லின் அடிப்படை வசதிகளை நிறைவேற்றவில்லை என்ற குற்றச்சாட்டும் அவர் மீது எழுந்திருக்கிறது. இதனால், மார்க்சிஸ்ட்க்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக இருப்பதாக தெரிகிறது. இருப்பினும், திண்டுக்கல்லில் வெற்றி வாகையை சூட அமைச்சர் சீனிவாசன் மல்லுக்கட்டிக் கொண்டிருக்கிறார்.