’மூன்று மாதங்கள் காத்திருக்காது உடனே கூடி முடிவெடுக்க வேண்டும்’ இடஒதுக்கீடு தீர்ப்பு பற்றி மார்க்சிஸ்ட் கட்சி

 

’மூன்று மாதங்கள் காத்திருக்காது உடனே கூடி முடிவெடுக்க வேண்டும்’ இடஒதுக்கீடு தீர்ப்பு பற்றி மார்க்சிஸ்ட் கட்சி

தமிழ்நாட்டில் 69 சதவிகித இடஒதுக்கீடு அமலில் இருந்துவரும் சூழலில் மருத்துவப் படிப்புக்கு மத்திய அரசு 27 சதவிகித இடஒதுக்கிடு எனச் சொல்வது சரியானது அல்ல என்று திமுக, மதிமுக, இடதுசாரி கட்சிகள் உள்ளிட்ட தமிழக கட்சிகள் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தன. அதன் விசாரணை பல கட்டங்களில் நடைபெற்றது. அதன் தீர்ப்பு இன்று வழங்கப்பட்டது.

ஓபிசி பிரிவினருக்கு 50 சதவிகித இடஒதுக்கீடு விஷயத்தில் மத்திய அரசே சட்டரீதியாக உத்தரவை இட முடியும். அதனால், மத்திய அரசே இதர பிற்படுத்தப் பட்ட பிரிவினருக்கு 50 சதவிகித இட ஒதுக்கீடு அளிக்கும் விஷயம் தொடர்பாக சட்டத்தை இயற்றி வெளியிட வேண்டும். இதை, அடுத்த மூன்று மாதங்களுக்குள் முடிவு செய்ய வேண்டும்’ என்று நீதிமன்றம் வலியுறுத்தி உள்ளது.

’மூன்று மாதங்கள் காத்திருக்காது உடனே கூடி முடிவெடுக்க வேண்டும்’ இடஒதுக்கீடு தீர்ப்பு பற்றி மார்க்சிஸ்ட் கட்சி

இந்தத் தீர்புக்கு குறித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) யின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

அதில் “இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி தலைமையிலான அமர்வு இன்று வரலாற்று சிறப்பு மிக்கத் தீர்ப்பை வழங்கியுள்ளது. அத்தீர்ப்பில் “மாநிலங்கள் வழங்கியுள்ள அகில இந்திய ஒதுக்கீட்டுக்கான இடங்களில் பிற்படுத்தப்பட்டோருக்கான இட ஒதுக்கீட்டினை வழங்கிட வேண்டும். இதை மறுப்பதற்கு எந்த நியாயமும் இல்லை என மத்திய அரசின் வாதத்தை நிராகரித்துள்ளது. மேலும், இந்த அகில இந்திய தொகுப்பு இடங்களில் அந்தந்த மாநிலங்கள் அமலாக்கும் இடஒதுக்கீட்டு கொள்கையின் அடிப்டையில் இடஒதுக்கீட்டினை நிராகரிப்பதற்கான எந்த சட்டவிதிகளும் இல்லை” எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

’மூன்று மாதங்கள் காத்திருக்காது உடனே கூடி முடிவெடுக்க வேண்டும்’ இடஒதுக்கீடு தீர்ப்பு பற்றி மார்க்சிஸ்ட் கட்சி

எனவே, அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களில் பிற்படுத்தப்பட்டோருக்கான இட ஒதுக்கீடு பிரச்சனையை மூன்று மாதங்களுக்குள் தமிழ்நாடு சுகாதாரத்துறை செயலாளர், மத்திய அரசின் சுகாதாரத்துறை செயலாளர், மருத்துவ கவுன்சில் அதிகாரி ஆகிய மூவர் கொண்ட குழு முடிவெடுத்து அறிவிக்க வேண்டுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.

இத்தீர்ப்பினை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் வரவேற்பதோடு, மூன்று மாதம் வரை காத்திராமல், விரைவில் இக்குழு கூடி முடிவெடுப்பதற்கான நடவடிக்கையை தமிழக அரசு மேற்கொள்ள வேண்டுமென கேட்டுக் கொள்கிறோம். இக்குழுவில் இடம்பெறவுள்ள மத்திய சுகாதாரத்துறை செயலாளர், மருத்துவ கவுன்சில் அதிகாரி ஆகியோர் மீண்டும் மத்திய பாஜக அரசின் இடஒதுக்கீட்டு எதிர்ப்பு நிலையினை மேற்கொள்ளக் கூடாது என வற்புறுத்திக் கேட்டுக் கொள்கிறோம்’ என்று குறிப்பிட்டுள்ளார்.