எங்க வலிமைக்கு ஏற்ற தொகுதியை கொடுங்க.. மார்க்சிஸ்ட் கட்சி எதிர்பார்ப்பு!

 

எங்க வலிமைக்கு ஏற்ற தொகுதியை கொடுங்க.. மார்க்சிஸ்ட் கட்சி எதிர்பார்ப்பு!

சட்டமன்றத் தேர்தலுக்கான தொகுதி பங்கீட்டில் திமுகவுடன் பல கூட்டணிக் கட்சிகள் அதிருப்தியில் இருக்கின்றன. கேட்ட தொகுதிகளை கொடுக்க திமுக மறுப்பதால், புலம்பித் தவிக்கும் கூட்டணிக் கட்சிகள் கொடுத்த தொகுதிகளை வாங்கிக் கொண்டு ஒப்பந்தத்தில் கையெழுத்திட வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளன. ஆனால், ஒரு சில கட்சிகளோ திமுகவுடன் பல்வேறு கட்ட பேச்சுவார்த்தை நடத்தி தான் நினைத்ததை சாதிக்க முயற்சிக்கின்றன.

எங்க வலிமைக்கு ஏற்ற தொகுதியை கொடுங்க.. மார்க்சிஸ்ட் கட்சி எதிர்பார்ப்பு!

அந்த வகையில், திமுகவுடன் கூட்டணியில் இருக்கும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி இரட்டை இலக்கத்தில் தொகுதிகளை ஒதுக்குமாறு கேட்டுக் கொண்டிருக்கிறது. ஆனால், அதை ஏற்க மறுக்கும் திமுக இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு கொடுத்ததை போல 6 தொகுதிகள் மட்டுமே வழங்குவோம் என திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.

எங்க வலிமைக்கு ஏற்ற தொகுதியை கொடுங்க.. மார்க்சிஸ்ட் கட்சி எதிர்பார்ப்பு!

இந்த நிலையில் சென்னையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த மார்க்சிஸ்ட் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன், திமுகவுடன் தொகுதி பங்கீடு விரைவில் முடிவு என எதிர்பார்க்கிறோம். எங்கள் வலிமைக்கு ஏற்ப அதிக தொகுதிகளை நாங்கள் எதிர்பார்க்கிறோம். எங்கள் கட்சிக்கு எத்தனை தொகுதிகள் ஒதுக்குவீர்கள் என்ற அடிப்படையிலேயே பேசுகிறோம்.

மற்ற கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள் என்பதை கணக்கிட்டு நாங்கள் பேசவில்லை என ஆதங்கத்துடன் தெரிவித்தார். மார்க்சிஸ்ட்டின் இந்த கோரிக்கையை திமுக ஏற்குமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்…!