வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு: மார்க்சிஸ்ட் கட்சியினருக்கும் போலீசாருக்கும் இடையே தள்ளுமுள்ளு!

 

வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு: மார்க்சிஸ்ட் கட்சியினருக்கும் போலீசாருக்கும் இடையே தள்ளுமுள்ளு!

சென்னை பாரிமுனையில் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் மார்க்சிஸ்ட் கட்சியினருக்கும் போலீசாருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

மத்திய அரசு கொண்டு வந்த வேளாண்துறை சம்பந்தப்பட்ட 3 மசோதாக்கள் மக்களவையில் நிறைவேறியது. அதனைத்தொடர்ந்து அந்த மசோதாக்கள் மீண்டும் மாநிலங்களவையில் தாக்கல் செய்யப்பட்டு, குரல் வாக்கெடுப்பின் மூலம் 2 மசோதாக்கள் நிறைவேறின. இந்த மசோதாக்களால் விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்படுவார்கள் என்றும் விளைபொருட்களுக்கு குறைந்த பட்ச விலை என்பதே இருக்காது என்றும் அச்சம் தெரிவிக்கும் எதிர்க்கட்சிகள், அவையில் கடும் அமளியில் ஈடுபட்டு வருகின்றனர்.

வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு: மார்க்சிஸ்ட் கட்சியினருக்கும் போலீசாருக்கும் இடையே தள்ளுமுள்ளு!

அவை விதிமுறைகள் அடங்கிய புத்தகத்தை கிழித்தெறிந்தும், மைக்கை உடைக்க முயன்றும், அவைத்தலைவர் அருகே சென்று முற்றுகையிட்டும் மசோதாக்களுக்கு எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தன. ஆனால், பாஜக பக்கம் பெரும்பான்மையான எம்.பிக்கள் இருப்பதால் எதிர்க்கட்சிகளின் கருத்துக்கள் அவையில் எடுபடவில்லை. இந்த மசோதாக்களுக்கு தமிழகத்திலும் கடும் எதிர்ப்புகள் கிளம்பி வருகிறது.

இந்த நிலையில், வேளாண் சட்டங்களை எதிர்த்து மார்க்சிஸ்ட் கட்சியினர் சென்னை பாரிமுனையில் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். பிறகு, அக்கட்சியினர் தலைமை செயலகத்தை நோக்கி பேரணியாக செல்ல முயன்றதால், அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தினர். இதனால் போலீசாருக்கும் மார்க்சிஸ்ட் கட்சியினருக்கும் இடையே தள்ளு முள்ளு ஏற்பட்டது.