நிபுணர்களின் கணிப்புகளை பொய்யாக்கிய மாருதி சுசுகி… டிசம்பர் காலாண்டில் ரூ.1,941.4 கோடி லாபம்

நிபுணர்களின் கணிப்புகளை பொய்யாக்கிய மாருதி சுசுகி… டிசம்பர் காலாண்டில் ரூ.1,941.4 கோடி லாபம்

மாருதி சுசுகி நிறுவனம் 2020 டிசம்பர் காலாண்டில் தனிப்பட்ட முறையில் நிகர லாபமாக ரூ.1,941.4 கோடி ஈட்டியுள்ளது. இது நிபுணர்களின் மதிப்பீட்டைக் காட்டிலும் அதிகமாகும்.

நாட்டின் மிகப்பெரிய கார் தயாரிப்பு நிறுவனமான மாருதி சுசுகி நிறுவனம் கடந்த டிசம்பர் காலாண்டு நிதிநிலை முடிவுகளை வெளியிட்டுள்ளது. மாருதி சுசுகி நிறுவனம் 2020 டிசம்பர் காலாண்டில் தனிப்பட்ட முறையில் நிகர லாபமாக ரூ.1,941.4 கோடி ஈட்டியுள்ளது. இது முந்தைய ஆண்டின் இதே காலாண்டைக் காட்டிலும் 24.1 சதவீதம் அதிகமாகும். 2019 டிசம்பர் காலாண்டில் இந்நிறுவனத்தின் தனிப்பட்ட முறையில் நிகர லாபமாக ரூ.1,564.8 கோடி ஈட்டியிருந்தது.

நிபுணர்களின் கணிப்புகளை பொய்யாக்கிய மாருதி சுசுகி… டிசம்பர் காலாண்டில் ரூ.1,941.4 கோடி லாபம்
மாருதி சுசுகி

2020 டிசம்பர் காலாண்டில் மாருதி சுசுகி நிறுவனத்தின் தனிப்பட்ட வருவாய் ரூ.23,457.8 கோடியாக உயர்ந்துள்ளது. இது 2019 டிசம்பர் காலாண்டைக் காட்டிலும் 13.3 சதவீதம் அதிகமாகும். அந்த காலாண்டில் மாருதி சுசுகி நிறுவனத்தின் தனிப்பட்ட வருவாய் ரூ.20,706.8 கோடியாக இருந்தது. 2020 டிசம்பர் காலாண்டில் மாருதி சுசுகி நிறுவனம் வரி செலவினமாக ரூ.508.4 கோடி மேற்கொண்டு இருந்தது.

நிபுணர்களின் கணிப்புகளை பொய்யாக்கிய மாருதி சுசுகி… டிசம்பர் காலாண்டில் ரூ.1,941.4 கோடி லாபம்
மாருதி சுசுகி

மாருதி சுசுகி நிறுவனம் 2020 டிசம்பர் காலாண்டில் மொத்தம் 4.95 லட்சம் கார்களை விற்பனை செய்துள்ளது. 2019 டிசம்பர் காலாண்டைக் காட்டிலும் 13.4 சதவீதம் அதிகமாகும். 2020 டிசம்பர் காலாண்டில் மாருசு சுசுகி நிறுவனம் உள்நாட்டில் 4.67 லட்சம் கார்களை விற்பனை செய்துள்ளது. 28,528 கார்களை வெளிநாட்டுக்கு ஏற்றுமதி செய்துள்ளது.