மாருதி கார் உரிமையாளர்களுக்கு சந்தோஷமான செய்தி…. உத்தரவாதம் மற்றும் சேவை காலக்கெடு ஜூன் இறுதிவரை நீட்டிப்பு…

மாருதி கார் உரிமையாளர்களுக்கு சந்தோஷமான செய்தி…. உத்தரவாதம் மற்றும் சேவை காலக்கெடு ஜூன் இறுதிவரை நீட்டிப்பு…

நாட்டின் மிகப்பெரிய கார் தயாரிப்பு நிறுவனமான மாருதி சுசுகி இந்தியா நிறுவனம் தற்போதைய கொரோன வைரஸ் நெருக்கடியை கருத்தில் கொண்டு தனது வாடிக்கையாளர்களுக்கு உத்தரவாதம் மற்றும் சேவை கால்கெடுவை ஜூன் இறுதி வரை மேலும் ஒரு மாதம் நீட்டித்துள்ளது. மாருதி சுசுகி இந்தியா நிறுவனத்தின் நடவடிக்கை, லாக்டவுன் காரணமாக முந்தைய சர்வீஸ் மற்றும் வாரண்டி பலன்களை பெற முடியாத மாருதி கார் உரிமையாளர்களுக்கு பெரிய ஆறுதலாக அமையும்.

மாருதி கார் உரிமையாளர்களுக்கு சந்தோஷமான செய்தி…. உத்தரவாதம் மற்றும் சேவை காலக்கெடு ஜூன் இறுதிவரை நீட்டிப்பு…

இது தொடர்பாக அந்நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: இலவச சேவை, வாரண்டி (உத்தரவாதம்) மற்றும் நீடிக்கப்பட்ட வாரண்டி ஆகியவற்றுக்கான செல்லுப்படியாகும் காலம் மே மாதத்துடன் முடிந்தவர்களுக்காக இலவச சேவை, வாரண்டி மற்றும் நீடிக்கப்பட்ட உத்தரவாதத்தை ஜூன் இறுதி வரை வழங்க நிறுவனம் முடிவு செய்துள்ளது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாருதி கார் உரிமையாளர்களுக்கு சந்தோஷமான செய்தி…. உத்தரவாதம் மற்றும் சேவை காலக்கெடு ஜூன் இறுதிவரை நீட்டிப்பு…

விற்பனையை அதிகரிக்கும் நோக்கில், புதிய கார் வாங்குபவர்களுக்கு நெகிழ்வான சமமான மாத தவணை வாய்ப்புகளை வழங்குதற்காக மாருதி சுசுகி இந்தியா நிறுவனம் எச்.டி.எப்.சி. வங்கியுடன் கூட்டு சேர்ந்துள்ளது. எச்.டி.எப்.சி. வங்கி கடன்தாரர்களுக்கு 3 விதமான திரும்ப செலுத்துதல் வாய்ப்புகளை வழங்குவதாக தகவல். கொரோனா வைரஸ் பரவலை தடுப்பதற்காக கடந்த மார்ச் 25ம் தேதி முதல் நேற்று வரையிலான நாடு தழுவிய லாக்டவுனால் வாகன துறை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. கடந்த மாதம் லாக்டவுன் விதிமுறைகளை தளர்த்தப்பட்டதை தொடர்ந்து நாடு முழுவதும் வாகன ஷோரூம்கள் மற்றும் தயாரிப்பு ஆலைகள் மீண்டும் இயங்க தொடங்கின.